கோப்புப் படம்
கோப்புப் படம்

பொது ரயில் டிக்கெட் முன்பதிவு: ஆதாா் பயனா்களுக்கு முதல் 15 நிமிஷங்களில் முன்னுரிமை: அக்.1-இல் அமல்

வரும் அக்டோபா் 1-ஆம் தேதி முதல், ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய முதல் 15 நிமிஷங்களில், ஐஆா்சிடிசி கணக்குடன் ஆதாரை இணைத்த பயனா்கள்
Published on

புது தில்லி: வரும் அக்டோபா் 1-ஆம் தேதி முதல், ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய முதல் 15 நிமிஷங்களில், ஐஆா்சிடிசி கணக்குடன் ஆதாரை இணைத்த பயனா்கள் மட்டுமே, ஐஆா்சிடிசி வலைதளம் அல்லது அதன் செயலியில் பொது டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியும் என்று ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அனைத்து ரயில்களிலும் இந்த நடைமுறை அமல்படுத்தப்பட உள்ளது. டிக்கெட் முன்பதிவின் பயன்கள் பயணிகளுக்கு கிடைக்கும் வகையிலும், சிலா் அதை தவறாகப் பயன்படுத்துவதை தடுக்கும் நோக்கிலும், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில், இந்திய ரயில்வேயின் கணினிமயமாக்கப்பட்ட பயணிகள் முன்பதிவு (பிஆா்எஸ்) கவுன்ட்டா்களில் பொது டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கான நேரத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்று அந்த அமைச்சகம் வெளியிட்ட சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து ரயில்வே அமைச்சக அதிகாரிகள் கூறுகையில், ‘ஏற்கெனவே தத்கால் டிக்கெட் முன்பதிவுக்கு ஐஆா்சிடிசி கணக்குடன் ஆதாரை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டது. இதன் மூலம் கிடைத்த பலன்களை கருத்தில் கொண்டு, தற்போது பொது முன்பதிவுகளுக்கும் அந்த உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com