
ஷீஷ் மஹால் பங்களா வெள்ளை யானையைப் போன்றது, அதன் தலைவிதி குறித்து தில்லி அரசு இன்னும் முடிவு செய்யவில்லை என்று முதல்வர் ரேகா குப்தா கூறினார்.
2015 முதல் ஆம் ஆத்மி தில்லியில் ஆட்சி அமைத்ததிலிருந்து கடந்தாண்டு செப்டம்பர் முதல்வர் பதவியிலிருந்து விலகும் வரை "ஷீஷ் மஹால்" என்று பாஜகவால் முத்திரை குத்தப்பட்ட சிவில் லைன்ஸ் பகுதியில் ஃபிளாக்ஸ்டாஃப் சாலை பங்களாவில் கேஜரிவால் வசித்து வந்தார். தில்லியின் முதல்வராக இருந்தபோது அரவிந்த் கேஜரிவால் வாழ்ந்து வந்த வீட்டைப் பல கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தியதாகவும், அதிக விலையுயர்ந்த ஆடம்பர பொருள்கள் பயன்படுத்தியதாகவும் பாஜக குற்றம் சாட்டியது.
இதையடுத்து, பஞ்சஜன்யா நடத்திய ஆதார் இன்ஃப்ரா கன்ஃப்ளூயன்ஸ் நிகழ்ச்சியில் முதல்வர் ரேகா குப்தா கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில்,
பங்களா கட்டுவதற்காக தில்லி மக்கள் கடினமாக உழைத்த பணத்தை ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளர் கேஜரிவால் வீணடித்துள்ளதாக அவர் குற்றம் சாட்டினார்.
ஷீஷ் மஹால் தில்லி அரசின் வெள்ளை யானை போன்று உள்ளது. இதை என்ன செய்வது என்று நாங்கள் யோசித்து வருகிறோம். இந்திய தலைமை கணக்குத் தணிக்கையாளர் தனது அறிக்கையில் 2022ல் ரூ. 33.86 கோடி செலவில் மேம்படுத்தப்பட்டதாக மதிப்பிட்டுள்ளார். இருப்பினும், ரூ. 75-80 கோடி செலவிடப்பட்டதாகப் பாஜக தலைவர்கள் கூறினர்.
இந்த நிலையில், ஷீஸ் மஹாலில் தில்லி மக்களின் பொது வளங்கள் வீணடிக்கப்படுவதைப் பார்ப்பது வேதனையளிக்கிறது, அதற்காகச் செலவிடப்பட்ட முழுப் பணமும் அரசு கருவூலத்திற்கு வட்டியுடன் திருப்பித் தரப்படும் என்று அவர் உறுதியளித்தார்.
இதையும் படிக்க: செங்கல்பட்டு உள்பட 6 மாவட்டங்களில் இன்று கனமழை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.