வக்ஃப் சட்டம்: ஆட்சியர் அதிகாரம் உள்பட சில விதிகளுக்கு இடைக்காலத் தடை!

மத்திய அரசு கொண்டு வந்த வக்ஃப் சட்டத் திருத்தத்திற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
Supreme Court
கோப்புப்படம்IANS
Published on
Updated on
1 min read

மத்திய அரசு கொண்டு வந்த வக்ஃப் சட்டத் திருத்தத்திற்கு முழுவதுமாக தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

நாட்டில் முஸ்லிம்கள் தானமாகவும், நன்கொடையாகவும் அளிக்கும் நிலங்கள் மற்றும் சொத்துகளை வக்ஃப் வாரியம் நிா்வகித்து வருகிறது. இந்நிலையில், வக்ஃப் சொத்துகளின் நிா்வாகத்தைச் சீரமைக்கும் நோக்கில், 1995-ஆம் ஆண்டின் வக்ஃப் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளும் வகையில் மத்திய அரசு வக்ஃப் திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்தது.

மத்திய அரசு கொண்டு வந்த இந்த வக்ஃப் சட்டத் திருத்தத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள் இன்று தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், "வக்ஃப் சட்டத் திருத்தத்திற்கு முழுவதுமாக தடை விதிக்க எந்த முகாந்திரமும் இல்லை.

எனினும் வக்ஃப் ஒன்றை உருவாக்க ஒருவர் 5 ஆண்டுகள் இஸ்லாமிய மதத்தைப் பின்பற்ற வேண்டும் என்ற விதிக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. ஒருவர் இஸ்லாம் மதத்தைப் பின்பற்றுபவரா என்பதைத் தீர்மானிப்பதற்கான விதிகள் வகுக்கப்படும் வரை இந்த விதி நிறுத்தி வைக்கப்படுகிறது.

அதேபோல வக்ஃப் வாரியத்தில் அதிகபட்சமாக முஸ்லிம் அல்லாதவர்கள் 4 பேர் வரை இருக்கலாம். மாநிலத்திற்கு இது 3 ஆக நிர்ணயிக்கப்படுகிறது.

5 ஆண்டுகள் உறுப்பினராக இருந்தால் மட்டுமே நிலம் நன்கொடையை அளிக்கலாம் என்ற உத்தரவும் நிறுத்திவைக்கப்படுகிறது.

மேலும் வக்ஃப் விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர்களுக்கு வழங்கப்பட்ட சில அதிகாரங்களுக்கு தடை விதிக்கப்படுகிறது.

வக்ஃப் என அறிவிக்கப்பட்ட சொத்து, அரசாங்கச் சொத்தா என்பதைத் தீர்மானித்து உத்தரவுகளைப் பிறப்பிக்கும் ஆட்சியரின் அதிகாரம் நிறுத்திவைக்கப்படுகிறது.

தனிப்பட்ட உரிமைகள் பற்றி முடிவெடுக்க ஆட்சியரை அனுமதிக்க முடியாது. இது அதிகாரத்தை மீறும் செயல்.

தீர்ப்பாயத்தால் தீர்ப்பு வழங்கும் வரை 3 ஆம் நபருக்கு உரிமை அளிக்க முடியாது.

அதேபோல வக்ஃப் வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி முடிந்தவரை ஒரு முஸ்லிமாக இருக்க வேண்டும் என்று கருதுகிறோம்" என்று கூறியுள்ளது.

Summary

Waqf Amendment Act 2025: Supreme Court Order On Pleas For Interim Order

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com