

சத்தீஸ்கரில், ரூ.8 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்ட பெண் நக்சல் ஒருவர், பாதுகாப்புப் படையினரிடம் இன்று (செப்.16) சரணடைந்துள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலத்தில், தடை செய்யப்பட்ட நக்சல் அமைப்பில் கடந்த 2005 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வந்த, ஜான்ஸி என்றழைக்கப்படும் பெண் ஒருவரை பிடிக்க காவல் துறையினர் ரூ.8 லட்சம் சன்மானம் அறிவித்து தேடி வந்தனர்.
இதனைத் தொடர்ந்து, கரியாபந்து காவல் துறையினரிடம் இன்று (செப்.16) அவர் சரணடைந்துள்ளதாக, பாதுகாப்புப் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், மத்திய உள் துறை அமைச்சகத்தின் திட்டத்தின் அடிப்படையில், சரணடையும் நக்சல்களின் மறுவாழ்வுக்காக உடனடியாக ரூ.1.5 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது.
முன்னதாக, வரும் 2026 ஆம் ஆண்டுக்குள் நாட்டில் உள்ள நக்சல்கள் அனைவரும் அழிக்கப்படுவார்கள் என மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: பிரதமரின் பிறந்தநாளில் 75 லட்சம் மரக்கன்றுகள் நட ஒடிசா அரசுத் திட்டம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.