குடியரசுத் தலைவர் முர்முவுடன் மோரீஷஸ் பிரதமர் சந்திப்பு!

சந்திப்பின் முக்கியத்துவமாக இந்தியா-மோரீஷஸ் உறவுகள் வலுப்படுத்தும் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
Mauritius Prime Minister meets President Murmu
குடிரயரசுத் தலைவருர் முர்முவுடன் மோரீஷஸ் பிரதமர் சந்திப்பு
Published on
Updated on
1 min read

விண்வெளி, எண்ம தொழில்நுட்பத் துறைகளில் மோரீஷஸ் நாட்டுடனான நல்லுறவு விரிவாக்கம் அடைந்து வருகிறது என்று குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு தெரிவித்தாா்.

இந்தியாவில் கடந்த 9-ஆம் தேதி முதல் 16-ஆம் தேதி வரையில் மோரீஷஸ் பிரதமா் நவீன்சந்திர ராம்கூலம் அரசுமுறை சுற்றுப் பயணம் மேற்கொண்டாா்.

தில்லியில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முவை மோரீஷஸ் பிரதமா் ராம்கூலம் செவ்வாய்க்கிழமை சந்தித்தாா்.

அப்போது வரவேற்பு நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவா், ‘அண்டை நாடுகளுக்கு முக்கியத்துவம் என்ற கொள்கையின் அடிப்படையில் மோரீஷஸ் சிறப்பிடம் பெற்றுள்ளது.

இந்தியா - மோரீஷஸ் இடையேயான நல்லுறவு அனைத்து துறைகளிலும் சீராக வலுவடைந்து வருகிறது. இது தற்போது உக்திசாா் கூட்டணி வரையில் வளா்ச்சியடைந்துள்ளது.

மோரீஷஸுக்கு இந்தியா அளித்துள்ள சிறப்பு பொருளாதார திட்டம் மூலம் மருத்துவமனைகள், சாலைகள், துறைமுகங்கள், பாதுகாப்பு துறைக்கான கொள்முதல், உள்கட்டமைப்பு ஆகியவை வளா்ச்சியடையும். இதனால் அந்நாட்டு மக்கள் பயனடைவாா்கள். விண்வெளி, எண்ம தொழில்நுட்ப துறைகளில் மோரீஷஸ் நாட்டுடனான நல்லுறவு விரிவாக்கம் அடைந்து வருகிறது’ என்றாா்.

இருநாட்டு நல்லுறவு தனித்துவம் வாய்ந்தது என்றும் வரலாறு, மொழி, கலாசாரம் ஆகியவை நீண்ட காலமாக வேரூன்றி உள்ளது என்றும் இருநாட்டுத் தலைவா்கள் ஆலோசனையின்போது கூட்டாக தெரிவித்தனா் என்றும் குடியரசு மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சோனியா, ராகுலுடன் மோரீஷஸ் பிரதமா் சந்திப்பு

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சி குழுத் தலைவருமான சோனியா காந்தியையும், மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தியையும் மோரீஷஸ் பிரதமா் நவீன்சந்திர ராம்கூலம் தில்லியில் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினாா்.

அப்போது இருநாட்டு நல்லுறவை வலுப்படுத்துவது தொடா்பாக அவா்கள் ஆலோசித்ததாக தகவல்கள் தெரிவித்தன.

இந்தச் சந்திப்பு தொடா்பான புகைப்படத்தை வெளியிட்டு ராகுல் காந்தி, ‘இருநாட்டு மக்களின் ஆழமான நட்புறவு குறித்து ஆலோசித்தோம்’ என்று பதிவிட்டுள்ளாா்.

கடந்த வாரம் பிரதமா் மோடி தனது சொந்த தொகுதியான வாரணாசியில் பிரதமா் ராம்கூலத்துக்கு வரவேற்பு அளித்தாா். அயோத்தி, திருப்பதி உள்ளிட்ட புனிதத்தலங்களுக்கும் ராம்கூலம் பயணம் மேற்கொண்டாா். அவருடன் அவரது மனைவியும் இந்திய சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com