குடியரசு துணைத் தலைவருடன் மோரீஷஸ் பிரதமர் சந்திப்பு!

குடியரசு துணைத் தலைவரை மோரீஷஸ் பிரதமர் சந்தித்துள்ளது குறித்து..
குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனுடன் மோரீஷஸ் பிரதமர் நவீன் ராம்கூலம்
குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனுடன் மோரீஷஸ் பிரதமர் நவீன் ராம்கூலம்எக்ஸ்
Published on
Updated on
1 min read

குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனை மோரீஷஸ் நாட்டின் பிரதமர் நவீன் ராம்கூலம் நேரில் சந்தித்து உரையாடியுள்ளார்.

கிழக்கு ஆப்பிரிக்க நாடான மோரீஷஸின் பிரதமர் நவீன் ராம்கூலம், கடந்த செப்.9 ஆம் தேதியன்று 8 நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்தார். அப்போது, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த அவர் வர்த்தகம், முதலீடு உள்ளிட்ட துறைகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

இந்நிலையில், குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனை அவரது அலுவலகத்தில், மோரீஷஸ் பிரதமர் நவீன் ராம்கூலம் இன்று (செப்.16) நேரில் சந்தித்து உரையாடியுள்ளார்.

கடந்த செப்.12 ஆம் தேதியன்று குடியரசு துணைத் தலைவராகப் பதவியேற்ற பின், சி.பி. ராதாகிருஷ்ணனை வெளிநாட்டு அதிகாரி ஒருவர் சந்தித்துள்ளது இதுவே முதல்முறை எனக் கூறப்படுகிறது.

இந்த சந்திப்பில், இருநாடுகளுக்கு இடையிலான வர்த்தகம், பொருளாதாரம் ஆகிய துறைகளின் மீதான ஒத்துழைப்புகள் குறித்துப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: 12% ஜிஎஸ்டியால் கடந்த 8 ஆண்டுகளாக மக்களைச் சுரண்டிய பாஜக அரசு! - ப. சிதம்பரம்

Summary

Prime Minister of Mauritius Naveen Ramgoolam met and held a personal conversation with Vice President C.P. Radhakrishnan.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com