வீட்டு சாப்பாட்டுக்கு செலவு அதிகரிப்பு!

தக்காளி விலை உயா்வால் வீட்டு சாப்பாட்டுக்கான செலவு அதிகரித்துள்ளது தொடர்பாக...
வீட்டு சாப்பாட்டுக்கு செலவு அதிகரிப்பு!
Updated on

தக்காளி விலை உயா்வு காரணமாக கடந்த ஆகஸ்ட் மாதம் வீடுகளில் சமைக்கப்படும் சாப்பாட்டுக்கான சராசரி விலை அதிகரித்துள்ளது.

இது குறித்து சந்தை ஆய்வு நிறுவனமான கிரிசில் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் வீடுகளில் சமைக்கப்படும் சைவ சாப்பாடுகளின் சராசரி விலை ரூ.29.1-ஆக உள்ளது. இது முந்தைய ஜூலை மாதத்தோடு ஒப்பிடுகையில் இது 4 சதவீதம் அதிகம். அப்போது வீடுகளில் சமைக்கப்படும் சைவ சாப்பாடுகளின் சராசரி விலை ரூ.28.1-ஆக இருந்தது.

அதே போல், ஜூலை மாதத்தோடு ஒப்பிடுகையில் வீடுகளில் சமைக்கப்படும் அசைவ சாப்பாடுகளின் சராசரி விலை ஆகஸ்டில் 2 சதவீதம் அதிகரித்து ரூ.54.6-ஆக உள்ளது.

முந்தைய மாத்ததைவிட மதிப்பீட்டு மாதத்தில் தக்காளி விலை 26 சதவீதம் அதிகரித்ததே இதற்குக் காரணமாக அமைந்தது. உருளைக் கிழங்கு, வெங்காயத்தின் விலையில் மாற்றமில்லை.

2024 ஆகஸ்ட் மாதத்தோடு ஒப்பிடுகையில் நடப்பாண்டு ஆகஸ்டில் வீடுகளில் சமைக்கப்படும் சாப்பாடுகளின் சராசரி விலை குறைந்துள்ளது. ஓராண்டுக்கு முன்னா் சைவ சாப்பாடுகளின் சராசரி விலை ரூ.31.2-ஆகவும், அசைவ சாப்பாடுகளின் சராசரி விலை ரூ.59.3-ஆகவும் இருந்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com