பிரதமர் மோடி பிறந்தநாள்: தலைவர்கள் வாழ்த்து!

பிரதமர் மோடிக்கு தலைவர்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளதைப் பற்றி...
பிரதமர் மோடி!
பிரதமர் மோடி!
Published on
Updated on
2 min read

பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஸ்டாலின், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

இன்று தன்னுடைய 75-வது பிறந்தநாளைக் கொண்டாடும் பிரதமர் நரேந்திர மோடியை, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

அவர் மட்டுமின்றி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, மத்திய அமைச்சர்கள், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களும், தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை, தற்போதைய தலைவர் நயினார் நாகேந்திரன், பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

அசாதாராண தலைமைத் துவத்தின் கடின உழைப்பை எடுத்துக்காட்டி நாட்டிற்காக பெரிய இலக்குகளை விதைத்துள்ளீர்கள். நீங்கள் என்றென்றும் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கவும், உங்கள் தனித்துவமான தலைமையுடன், நாட்டை முன்னேற்றத்தின் புதிய உயரங்களுக்கு இட்டுச் செல்லவும் நான் கடவுளிடம் பிரார்த்திக்கிறேன்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா

தியாகம் மற்றும் அர்ப்பணிப்பின் சின்னமாகவும், கோடிக்கணக்கான நாட்டு மக்களுக்கு உத்வேகமாகவும் இருக்கும் பிரதமர் மோடிக்கு அவரது பிறந்தநாளில் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்.

கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக சமூக வாழ்வில் நாட்டு மக்களின் நலனுக்காக இடைவிடாமல், சோர்வடையாமல் அயராது உழைத்து வரும் மோடி, ஒவ்வொரு குடிமகனுக்கும் 'நாடுதான் முதன்மை' என்னும் உத்வேகமாக இருக்கிறார்.

ராகுல் காந்தி

இந்த நிலையில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “பிரதமர் நரேந்திர மோடி நல்ல ஆரோக்கியத்துடன் வாழ பிறந்தநாள் வாழ்த்துகள்” எனப் பதிவிட்டுள்ளார்.

முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், “பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்; அவர் நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ்

உங்கள் தொலைநோக்கு தலைமையும், நாட்டிற்கான அர்ப்பணிப்பும் லட்சக்கணக்கான மக்களுக்கு ஊக்கமளிக்கிறது. நல்ல ஆரோக்கியம், நீண்ட ஆயுள், நமது நாட்டை வழிநடத்த தொடர்ந்து வலிமை கிடைக்க வாழ்த்துகிறேன்.

நயினார் நாகேந்திரன் (தமிழக பாஜக தலைவர்)

மக்கள் பணியே மகேசன் பணி என்பதை மனதில் நிறுத்தி மக்கள் சேவைக்கு தன் வாழ்வையே அர்பணித்து மூன்றாவது முறையாக பிரதமராக சிறப்பாக செயலாற்றும் மக்கள் தலைவன், எளிய பின்னணியில் பிறந்து எட்டுத்திக்கிலும் போற்றப்படும் சரித்திர நாயகர், தேசப்பற்றை மட்டுமே தனது உயிர் மூச்சாகக் கொண்ட பெரும் தேசியவாதி, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி எனும் தாரக மந்திரத்துடன் பணியாற்றும் தன்னலமற்றவர், கடந்த பதினொரு ஆண்டுகளாக அனைத்துத் துறைகளிலும் பாரதத்தை சாதனைபுரியச் செய்த ஈடு இணையற்ற தலைவர், தாய்மொழியாக இல்லையென்றாலும் திக்கெட்டும் தமிழின் புகழ் பரப்பும் பற்றாளர் போன்ற எண்ணற்ற புகழ்களுக்குச் சொந்தக்காரரான நமது பிரதமர் நரேந்திர மோடிக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்று போல் என்றும் நீண்ட ஆயுளுடனும், பூரண நலத்துடனும் மேலும் பல்லாண்டு நமது பாரத தேசத்தை அவர் வழிநடத்திச் செல்ல வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

நடிகர் ரஜினி

பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். அவருக்கு நீண்ட ஆயுள், நல்ல ஆரோக்கியம், மன அமைதி மற்றும் நாட்டை வழிநடத்தும் வலிமை கிடைக்க வாழ்த்துகிறேன். ஜெய் ஹிந்த்!

அண்ணாமலை (தமிழக பாஜக முன்னாள் தலைவர்)

பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். நமது நாட்டிற்கு அவர் ஆற்றிய தன்னலமற்ற சேவை முன்னேற்ற பாதையில் செல்ல வழிவகை செய்தது.

இந்தியாவை மேன்மேலும் பெருமையை நோக்கி அழைத்துச் செல்ல அவருக்கு நல்ல உடல் ஆரோக்கியமும், நீண்ட ஆயுளும் கிடைக்க பிரார்த்திக்கிறேன்.

Summary

Prime Minister Modi's birthday: Leaders wish him well!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com