
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வியாழக்கிழமை(செப். 18) காலை செய்தியாளர்களுடன் பேசுகிறார். இந்தத் தகவலை காங்கிரஸ் தலைமை புதன்கிழமை இரவில் வெளியிட்டுள்ளது.
இது குறித்து காங்கிரஸ் கட்சியின் ஊடகப் பிரிவு தலைவர் பவன் கேரா வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், ‘செப். 18 சிறப்புச் செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்றுப் பேச உள்ளார் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி. இந்திரா பவன் அரங்கத்தில் காலை 10 மணிக்கு இந்தச் சந்திப்பு நடைபெற உள்ளது. ஊடகத் துறையைச் சார்ந்தோர் காலை 9.30 மணிக்கெல்லாம் அரங்கத்தில் கூடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்’ என்று பதிவிட்டுள்ளார்.
Tomorrow 18 Sept, Special Press Briefing by the Leader of Opposition in Lok Sabha, Shri Rahul Gandhi at 10 am at Indira Bhawan Auditorium.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.