
தெலங்கானாவின் நல்கொண்டாவைச் சேர்ந்த எம்எல்ஏ பதுலா லக்ஷ்ம ரெட்டி, தன் மகனின் வரவேற்பு நிகழ்ச்சியை கைவிட்டு, விவசாயிகளின் நலனுக்காக ரூ. 2 கோடி நன்கொடையை கொடுக்க முன் வந்துள்ளார்.
நல்கொண்டா மாவட்டத்தின் மிரியால்குடாவைச் சேர்ந்தவர் ஆளும் காங்கிரஸ் எம்.எல்.ஏ. லக்ஷ்ம ரெட்டி. இவர் தனது சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள விவசாயிகளுக்கு ஆதரவாக ரூ. 2 கோடி நன்கொடையை வழங்கியுள்ளார்.
லக்ஷ்ம ரெட்டி ரூ. 2 கோடிக்கான நன்கொடைக்கான காசோலையை இன்று தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியிடம் வழங்கினார். காசோலை வழங்கும்போது லக்ஷ்ம ரெட்டியுடன் அவரது மகன், மருமகள் மற்றும் பிற குடும்ப உறுப்பினர்கள் உடனிருந்தனர்.
எம்எல்ஏ லக்ஷ்ம ரெட்டி ஒரு லட்சம் விவசாயிகளுக்கு ஒரு பை இலவச யூரியாவை வழங்க முதல்வரிடம் வலியுறுத்தியுள்ளார்.
தனது மகனின் திருமணத்திற்காக எம்எல்ஏ லக்ஷ்ம ரெட்டி மிரியால்குடாவில் வரவேற்பு நிகழ்ச்சி நடத்தத் திட்டமிட்டிருந்தார். ஆனால் விவசாயிகளை ஆதரிப்பதற்காக அந்தப் பணத்தை நன்கொடையாக வழங்க முடிவு செய்ததாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவித்துள்ளது.
எம்எல்ஏவின் குடும்ப உறுப்பினர்களின் தாராளமான நன்கொடையை ரேவந்த் ரெட்டி பாராட்டினார்.
இதையும் படிக்க: ஆர்வத்தைத் தூண்டும் சக்தித் திருமகன் ஸ்னீக் பீக்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.