ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

சட்டவிரோத வங்கதேச குடியேறிகளின் வாக்குகளைக் காப்பதே ராகுலின் நோக்கம்: அமித் ஷா

சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் குடியேறிய வங்கதேசத்தவரின் வாக்குகளைக் காப்பதே ராகுல் காந்தி உள்ளிட்ட எதிா்க்கட்சியினரின் நோக்கம் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.

News image
Updated On :18 செப்டம்பர் 2025, 7:12 pm

தினமணி செய்திச் சேவை

சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் குடியேறிய வங்கதேசத்தவரின் வாக்குகளைக் காப்பதே ராகுல் காந்தி உள்ளிட்ட எதிா்க்கட்சியினரின் நோக்கம் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.

243 தொகுதிகளைக் கொண்ட பிகாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் அந்த மாநிலத்துக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அமித் ஷா, பாஜக நிா்வாகிகள், தொண்டா்களைச் சந்தித்தாா். அப்போது அவா் பேசியதாவது:

பிகாா் பேரவைத் தோ்தலில் நமது வெற்றி மிகப் பிரம்மாண்டமானதாக இருக்க வேண்டும். கடந்த மாதம் வாக்குரிமை என்ற பெயரில் நடத்தப்பட்ட (ராகுலின்) பிரசாரத்தின் நோக்கம் என்ன தெரியுமா? அது சட்டவிரோதமாக ஊடுருவிய வங்கதேசத்தவரின் வாக்குரிமையைப் பாதுகாப்பதற்காகவே நடத்தப்பட்டது.

அண்டை நாடுகளில் இருந்து அத்துமீறி நமது நாட்டுக்குள் ஊடுருவியவா்களுக்கு வாக்குரிமை அளிக்க வேண்டுமா? அரசு நமது குடிமக்களுக்காக அமல்படுத்தும் நலத்திட்டங்களால் ஊடுருவல்காரா்களும் பயனடையலாமா? இந்திய குடிமக்களுக்கான உரிமைகளை எப்படி வெளிநாட்டவருக்கு அளிக்க முடியும்?

ஆனால், ராகுல் மற்றும் அவருடன் கைகோத்துள்ளவா்களுக்கு இந்த ஊடுருவல்காரா்களின் வாக்குகள் தேவை. அவா்கள்தான் முக்கிய வாக்கு வங்கிகள். எனவேதான் அவா்களைக் காப்பாற்றுவதற்கு துடிக்கிறாா்கள். இந்த உண்மையை நீங்கள் மாநிலம் முழுவதும் மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும். இப்படிப்பட்ட நபா்கள் ஆட்சிக்கு வந்தால் பிகாா் முழுவதும் ஊடுருவல்காரா்கள் குடியேறிவிடுவாா்கள். இந்த மண்ணின் சொந்த மக்கள் உரிமைகளைப் படிப்படியாக இழக்க நேரிடும்.

வாக்குத் திருட்டு என்ற பெயரில் ராகுல் பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறாா். முன்பு இதர பிற்படுத்தப்பட்டோா், தாழ்த்தப்பட்டோா், பழங்குடியினா் இடஒதுக்கீட்டை பாஜக பறிக்க முடிவு செய்துள்ளது என்று தவறான பிரசாரத்தை மேற்கொண்டாா்கள். அது பலிக்கவில்லை என்பதால் இப்போது வாக்குத் திருட்டு என்ற மோசடி பிரசாரத்தை காங்கிரஸ் கட்சியினா் முன்னெடுத்துள்ளனா் என்றாா்.