மழை பாதித்த இடங்களில் ஆய்வுகள் தாமதம்! எம்.பி. கங்கனாவுக்கு வலுக்கும் தொகுதி எதிர்ப்பு!
மண்டி தொகுதியில் மழை பாதித்த இடங்களை ஆய்வு செய்த எம்.பி. கங்கனா ரணாவத்துக்கு தொகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஹிமாசல பிரதேசம் மாநிலத்தின் கடந்த மாதம் 25, 26 ஆகிய தேதிகளில் பெய்த கனமழையால் பல்வேறு பகுதிகளும் வெகுவாக பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில், தனது தொகுதியான மண்டியை ஆய்வுசெய்ய சுமார் 20 நாள்களுக்கு பின்னர் அத்தொகுதி எம்.பி. கங்கனா ரணாவத் சென்ற நிலையில், அவருக்கு தொகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கங்கனாவை பார்த்த அத்தொகுதி மக்கள், திரும்பிச் சென்று விடுங்கள், கங்கனா. நீங்கள் தாமதமாக வருகிறீர்கள்’’ என்று கறுப்புக் கொடியுடன் கோஷமிட்டனர். அவர்களை சமாதானப்படுத்த பாஜக நிர்வாகிகள் முயற்சித்தபோது, வாக்குவாதம்தான் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து, கட்சியினருக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான பிரச்னையைத் தீர்க்க காவல்துறை வரவேண்டிய நிலை ஏற்பட்டது.
இதையும் படிக்க: நீ உச்சத்திலேயே இரு! விஜய் மீது சீமான் காட்டம்?