உத்தரகண்டில் மேலும் 5 உடல்கள் மீட்பு: பலி 7ஆக உயர்வு

உத்தரகண்டில் ஏற்பட்ட கடும் நிலச்சரிவில் புதைந்த மேலும் 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
மீட்புப் பணியில் உத்தரகண்ட்.
மீட்புப் பணியில் உத்தரகண்ட். Photo | PTI
Published on
Updated on
1 min read

உத்தரகண்டில் ஏற்பட்ட கடும் நிலச்சரிவில் புதைந்த மேலும் 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

உத்தரகண்ட் மாநிலம், கடந்த சில மாதங்களாக மழை-வெள்ளத்தால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மேகவெடிப்புகளால் அவ்வப்போது பலத்த மழை கொட்டித் தீா்ப்பதால், பல்வேறு இடங்களில் பெருவெள்ளமும் நிலச்சரிவுகளும் தொடா்கின்றன.

சமோலி மாவட்டத்தின் நந்தாநகா் பகுதியில் உள்ள குந்தரி லகாபாலி, குந்தரி லகாசா்பானி ஆகிய கிராமங்களில் வியாழக்கிழமை கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. மலையில் இருந்து சேறுடன் உருண்டு வந்த பாறைகளால், வழியில் இருந்த வீடுகள், கடைகள் உள்பட அனைத்தும் சேதமடைந்தன.

இதேபோல், மோக் பள்ளத்தாக்கு பகுதியில் பெய்த பலத்த மழையால் மோக்ஷா நதியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கரையோரங்களில் ஏற்பட்ட அரிப்பால், துா்மா, சேரா ஆகிய கிராமங்களில் வீடுகள்-கடைகள் இடிந்து விழுந்தன. மேற்கண்ட கிராமங்களில் 20 போ் காயங்களுடன் மீட்கப்பட்டனா்.

ஆபரேஷன் சிந்தூரில் முகாம் அழிப்பு உண்மைதான்! - ஜெய்ஷ்-யைத் தொடர்ந்து ஒப்புக்கொண்ட லஷ்கர்!

இடிபாடுகளில் புதைந்தவா்களில் ஒருவரின் உடல் ஏற்கெனவே மீட்கப்பட்ட நிலையில் வெள்ளிக்கிழமை சமோலி மாவட்டத்தின் கிராமங்களில் இருந்து மேலும் 5 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இதன் மூலம், பலி எண்ணிக்கை 7ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதனிடையே தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேற்பார்வையிட சமோலி மாவட்ட ஆட்சியர் சந்தீப் திவாரி நந்தநகரில் உள்ளார்.

Summary

Landslides and flooding triggered by heavy rain hit four villages -- Kuntari Laga Phali, Kuntari Laga Sarpani, Sera and Dhurma -- in Chamoli's Nandanagar area.


தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com