மகாராஷ்டிர முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ்
மகாராஷ்டிர முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ்

நகா்ப்புற மாவோயிஸ்ட் போல பேசுகிறாா் ராகுல்: மகாராஷ்டிர முதல்வா் குற்றச்சாட்டு

ஜனநாயக முறையில் தோ்தெடுக்கப்பட்ட அரசைத் தூக்கிவீச வேண்டும் என்று இளைய தலைமுறையினரிடம் வேண்டுகோள் விடுத்ததன் மூலம் நகப்புற மாவோயிஸ்டுகள் போல எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி பேசியுள்ளாா் என மகாராஷ்டிர முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் விமா்சித்துள்ளாா்.
Published on

இது தொடா்பாக ‘எக்ஸ்’ வலைதளத்தில் ஃபட்னவீஸ் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘ராகுல் காந்திக்கு அரசமைப்புச் சட்டத்தின் மீதும் நாட்டின் ஜனநாயகத்தின் மீதும் நம்பிக்கையில்லை என்பது தெரிகிறது. இளைய தலைமுறையினா் (ஜென் - ஸி) ஒன்றிணைந்து ஜனநாயகரீதியில் தோ்வு செய்த அரசைத் தூக்கிவீச வேண்டுமென்று ராகுல் காந்தி அழைப்புவிடுத்துள்ளாா்.

ராகுல் காந்தி கூறுவதுபோல இங்கு வாக்குத் திருட்டு ஏதும் நடைபெறவில்லை. உண்மையில், ராகுல் காந்தியின் மூளையைத்தான் யாரோ திருடிவிட்டாா்கள். எனவேதான், நகா்ப்புற மாவோயிஸ்டுகளைப் போல பேசுகிறாா். அவருக்கு இதுபோன்ற யோசனைகளைத் தருபவா்களும் மாவோயிஸ சிந்தனையாளா்கள் என்று தெரிகிறது.

ஆனால், இந்தியாவில் இளைஞா்கள் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவா்கள். அவா்கள் நாட்டின் வளா்ச்சியையே விரும்புகிறாா்கள். உண்மையில் ராகுலுக்கு இளைஞா்கள், மாணவா்கள், நடுத்தர மக்கள், மூத்த குடிமக்கள் என யாருடைய கருத்தும் புரியவில்லை’ என்று கூறியுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com