
2025ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதமே, ஒரு வான திருவிழா மாதமாக அமைந்துவிட்டது. காரணம், கடந்த பௌர்ணமி சந்திர கிரகணம் நிகழ்ந்தது. வரும் 21ஆம் தேதி அமாவாசையன்று சூரிய கிரகணம் நிகழவிருக்கிறது.
சூரிய கிரகணம் என்றால், ஏதோ உலகமே இருளில் மூழ்கிவிடும் அளவுக்கு இல்லையென்றாலும் சாதாரண சூரிய உதயங்களைப் போலல்லாமல் வான அதிசயம் காட்டும் நிகழ்வாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த வான அதிசயம் இந்தியாவில் தெரியாது. ஒவ்வொரு நாட்டிலும் சூரிய கிரகண நேரம் மாறுபடுகிறது. உலகின் தெற்கு கோளத்தின் சில பகுதியிலிருந்து மட்டுமே இதனைக் காண முடியும்.
ஒட்டுமொத்த உலகில் 0.2 சதவீத மக்கள்தான், அதாவது 1.66 கோடி மக்கள் மட்டுமே, இந்த பகுதி சூரிய கிரகணத்தைக் காண முடியுமாம். ஒருவேளை, இந்த அதிர்ஷ்டம் நிறைந்த பகுதியில் நாம் நேரில் பார்க்க முடியாவிட்டாலும், நல்வாய்ப்பாக இணையதளங்கள் வாயிலாக அந்த வான அதிசயத்தை நாம் நேரலையில் காணலாம்.
பூமியின் தெற்கு அரைக்கோளப் பகுதி மக்கள் வானத்தைப் பார்க்கும் அந்த நிகழ்வின்போது, சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நிலவு வருகிறது.
இது முழு சூரிய கிரகணமாக அல்லாமல், பகுதி கிரகணமாகவே நிகழப்போகிறது. அதுவும் பசுபிக் தீவுகள், நியூ ஸிலாந்து, ஆஸ்திரேலியா, அன்டார்டிகா ஆகிய நாடுகளில் வாழும் மக்கள் கலவையான ஒரு அதிசய காட்சிகளைக் காணவிருக்கிறார்கள்.
சரியாக மதியம் 1.29 மணிக்கு சூரியனின் பரப்புக்குள் நிலவு வரத்தொடங்கும். அதிகபட்சமாக சூரியனை மறைக்கும் நிகழ்வு 3.41 மணிக்கு நிகழும். இதனை மத்திய பசுபிக் நாடுகளில் காண முடியும். எவ்வாறு நிலவு மறைந்து அரைவட்டமாக பூமிக்குத் தென்படுமோ, அதுபோல, அன்றைய தினம், சூரியன் ஒரு அரைவட்டமாக காட்சியளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிறகு, மெல்ல நிலவு சூரியனை விட்டு விலகத் தொடங்கும். அப்போது, சூரியன் புத்தொளி வீசியபடி வெளிப்படும். இந்த நிகழ்வை நெருங்க மாலை 5.53 மணி ஆகிவிடும். இது அன்டார்டிகாவில் நன்கு காண முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க.. ஒரே ஒரு வங்கிக் கணக்கு வைத்திருக்கிறீர்களா? ஆபத்து
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.