
பிரதமர் மோடியின் வாக்குத் திருட்டை நிரூபிக்க ஹைட்ரஜன் அணுகுண்டு விரைவில் வெடிக்கும் என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
மத்திய பாஜக அரசுடன் இணைந்து தேர்தல் ஆணையம் வாக்குத் திருட்டில் ஈடுபடுவதாக ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம்சாட்டி வருவதுடன் அதற்கான ஆதாரங்களையும் வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் கேரளத்தில் வயநாட்டில் செய்தியாளர்களுடன் பேசிய அவர்,
"வாக்குத் திருட்டு குறித்து இந்தியாவில் யாருக்கும் சந்தேகம் ஏற்படாத வகையில் ஒரு ஹைட்ரஜன் குண்டை வெடிக்க வைப்பேன். அது யதார்த்தத்தை முற்றிலுமாக சிதைக்கும். அதன்மூலமாக வாக்குத் திருட்டுக்கு மேலும் ஆதாரங்களை வழங்குவேன்.
நாங்கள் சொல்வதற்கு எங்களிடம் ஆதாரங்கள் இருக்கின்றன. ஆதாரங்கள் இல்லாமல் நாங்கள் எதையும் கூறவில்லை. இதுவரை நடந்த பல விஷயங்களுக்கு எங்களிடம் 100% ஆதாரங்கள் உள்ளன. இவை விரைவில் வெளியே வரப் போகின்றன.
பிரதமரின் வாராணசி தொகுதியில் இதுபோன்று நடந்திருக்கிறதா என்று ஊடகங்களின் ஊகங்களுக்கு விடுகிறேன். நான் என்னுடைய வேலையைச் செய்கிறேன்.
வாக்குத் திருட்டு தொடர்பான ஆதாரங்கள் ஹைட்ரஜன் குண்டுபோல வெடிக்கும்.
ஆலந்த் சட்டமன்றத் தொகுதியில் வாக்குத் திருட்டு குற்றச்சாட்டுகள் குறித்து கர்நாடக குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) விசாரித்து வருகிறது.
வாக்குத் திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட தொலைபேசி எண்கள் குறித்த தகவல்களை சிஐடி கேட்டுள்ளது. ஆனால், கர்நாடக சிஐடி கேட்கும் தகவல்களை தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் வழங்கவில்லை. தலைமை தேர்தல் ஆணையர் ஏன் வழங்க மறுக்கிறார்? அவர் மீது இதைவிட பெரிய குற்றச்சாட்டு எதுவும் இருக்க முடியாது" என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.