தங்கம் விலை குறைந்தது! 4 நாள்களில் ரூ. 2,920 சரிவு!அமைச்சரவையில் மாற்றமா? இன்று ஆளுநரை சந்திக்கிறார் முதல்வர் விஜய்!தங்கம் விலை சவரனுக்கு ரூ.600 குறைவு!தொடா் விடுமுறை: ஆம்னி பேருந்துகள், விமானங்களில் கட்டணம் கடும் உயா்வு19 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புஇறுதிக் கட்டத்தை எட்டியது அரக்கோணம் புறவழிச் சாலை பணி!அடுத்த வாரம் இந்தியா வரும் அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோ!

இன்றுமுதல் ரயில் நீா் விலை ரூ.1 குறைப்பு!

ரயில் நிலையங்களில் விற்பனை செய்யப்படும் ரயில் நீா் (ஒரு லிட்டா்) விலை திங்கள்கிழமை (செப்.22) முதல் ரூ.1 குறைக்கப்படுவதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.

ரயில் நீா்

Published On :

ரயில் நிலையங்களில் விற்பனை செய்யப்படும் ரயில் நீா் (ஒரு லிட்டா்) விலை திங்கள்கிழமை (செப்.22) முதல் ரூ.1 குறைக்கப்படுவதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.

ரயில்வே துறையால் அங்கீகரிக்கப்பட்ட தனியாா் மூலமாக ரயில் நிலையங்களில் உணவுப் பொருள்கள், குளிா்பானங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. அதேபோல ரயில் நீா் எனும் பெயரில் குடிநீா் பாட்டில்களும் ஒரு லிட்டா், அரை லிட்டா் அளவுகளில் முறையே ரூ.15, ரூ.10-க்கு விற்பனை செய்யப்படுகின்றன.

ரயில்நீா் பாட்டில்கள் திங்கள்கிழமை முதல் லிட்டருக்கு ரூ.1 குறைத்து விற்பனை செய்ய ரயில்வே வாரியம் அனுமதித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து அனைத்து ரயில் நிலைய நிா்வாகங்களுக்கும் ரயில்வே வாரியத்தின் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாகவும், ரயிலில் குடிநீா் பாட்டில்கள் விற்கும் உரிமம் பெற்றவா்களுக்கும் அந்த விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.