
டொனால்ட் டிரம்ப், விளாதிமீர் புதின், ஜி ஜின்பிங் ஆகிய மூவருக்குமே பிரதமர் நரேந்திர மோடி நண்பர் என்று குடியரசு துணைத் தலைவர் சி. பி. ராதாகிருஷ்ணன் இன்று(செப். 22) தெரிவித்தார்.
குடியரசு துணைத் தலைவராக பதவியேற்றுக்கொண்ட பின், முதல்முறையாக பொது நிகழ்ச்சியில் பேசிய சி. பி. ராதாகிருஷ்ணன், “இந்தியா மீது அமெரிக்காவால் 50 சதவீத வரி விதிக்கப்பட்டிருப்பினும், டிரம்ப் எப்போதும் சொல்வது, ‘மோடி எமது சிறந்த நண்பராவார்’ என்பதே.
இத்தகைய சூழலலிலும் டிரம்ப், ‘மோடிக்கு எதிராக நான் செயல்படுகிறேன்’ என்று சொன்னதேயில்லை. ‘மோடிக்காக நான் இருக்கிறேன்’ என்றே அவர் எப்போதும் குறிப்பிட்டு வருகிறார்.
அதேபோல, ரஷிய அதிபர் விளாதிமீர் புதினுக்கும் பிரதமர் மோடி நெருக்கமான நண்பராவார். சர்வதேச அரசியலில் வேற்றுமைகள் இருப்பினும், சீன அதிபர் ஜி ஜின்பிங் மோடியின் நல்ல நண்பராவார். அதனை இப்போது நாம் பார்த்து வருகிறோம்.
இதனாலேயே, செய்ய முடியாதவற்றையும் செய்து காட்டக்கூடியவராக மோடி இருக்கிறார். அவர் மக்களுக்காக பரிசுத்த உள்ளத்துடன் எதையும் செய்து வருகிறார். அவர் பிரதிபலனாக எதையும் எதிர்பார்த்துச் செய்யவில்லை” என்று வெகுவாகப் பாராட்டிப் பேசினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.