

மத்தியப் பிரதேசத்தில் கர்பா நடனம் ஆடிக்கொண்டிருந்த பெண்ணை துப்பாக்கி முனையில் கடத்திய கும்பலை போலீஸார் கைது செய்துள்ளனர்.
மத்தியப் பிரதேச மாநிலம், மந்த்சௌர் மாவட்டத்தில் சனிக்கிழமை கர்பா நடனப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த பெண்ணை கும்பல் ஒன்று துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது.
இதனைக் கண்ட அங்கிருந்த மற்ற பெண்கள் சிதறி ஓடினர். பெண்ணின் குடும்ப உறுப்பினர்களே அவரை துப்பாக்கி முனையில் கடத்தியதை போலீஸார் கண்டறிந்தனர்.
இதையடுத்து இரண்டு பெண்கள் உள்பட, அந்தப் பெண்ணின் குடும்ப உறுப்பினர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட நபர்கள் மீது பாரதிய நியாய சன்ஹிதா மற்றும் ஆயுதச் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் கடத்தப்பட்ட பெண்ணும் பத்திரமாக மீட்கப்பட்டார். விசாரணையில் இளம் பெண்ணின் குடும்பத்தினர் அவரது விருப்பத்திற்கு மாறாக திருமணம் செய்து வைத்தது தெரியவந்தது.
பின்னர் அவர் வீட்டை விட்டு வெளியேறி வேறு இடங்களில் தனியாக வசித்து வந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.