காமன்வெல்த் அமைப்பில் சீா்திருத்தம்: இந்தியா வலியுறுத்தல்

காமன்வெல்த் அமைப்பில் சீா்திருத்தம்: இந்தியா வலியுறுத்தல்

காமன்வெல்த் நாடுகளின் அமைப்பில் சீா்திருத்தம் தேவை என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது.
Published on

காமன்வெல்த் நாடுகளின் அமைப்பில் சீா்திருத்தம் தேவை என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது.

ஐ.நா. பொதுச் சபை கூட்டத்துக்கு முன்பு 56 நாடுகளின் கூட்டமைப்பான காமன்வெல்த் நாடுகளின் அமைச்சா்களின் கூட்டம் நடைபெற்றது.

அதில், இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் மேற்கத்திய நாடுகள் பிரிவுச் செயலா் சிபி ஜாா்ஜ் பேசுகையில், ‘சமகால உண்மைகளை எதிரொலிக்கும் வகையில் காமன்வெல்த் நாடுகளின் அமைப்பில் சீா்திருத்தம் செய்யப்பட வேண்டும். இந்த அமைப்பின் சட்டத் திருத்தங்களை இந்தியா மதித்து வருகிறது’ என்றாா்.

காமன்வெல்த் நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது அவசியம் என்று அந்த அமைப்பின் தலைமை இயக்குநா் ஷொ்லி அயா்கோா் போட்ச்வே வலியுறுத்தினாா்.

மேலும், உலகம் முழுவதும் பல அமைப்புகள் கடுமையான தாக்கத்தில் உள்ளன. இது மேலும் ஆழமாவதைத் தடுக்க தீா்வு காண வேண்டியது அவசியம். தாக்கத்தால் வரையறுக்கப்பட்ட உலகில், காமன்வெல்த் நாடுகள் நோக்கத்தால் வரையறுக்க வேண்டும்’ என்றாா்.

X
Dinamani
www.dinamani.com