பாடகர் ஸுபீன் கர்க் உடல் தகனம்!

பாடகர் ஸுபீன் கர்க் உடல் தகனம் செய்யப்பட்டது பற்றி...
பாடகர் ஸுபீன் கர்க் உடல் தகனம்
பாடகர் ஸுபீன் கர்க் உடல் தகனம்X / ANI
Published on
Updated on
1 min read

பிரபல அசாமிய பாடகர் ஸுபீன் கர்கின் உடல் செவ்வாய்க்கிழமை நண்பகல் தகனம் செய்யப்பட்டது.

அசாமி, ஹிந்தி மற்றும் வங்க மொழிகளில் முன்னணி பாடகராக வலம் வந்த ஸுபீன் கார்க் (வயது 52), சிங்கப்பூரில் ஆழ்கடல் சாகசத்தில் (ஸ்கூபா டைவிங்) ஈடுபட்டபோது விபத்தில் சிக்கி செப். 19 ஆம் தேதி மரணமடைந்தார்.

சிங்கப்பூரில் உடற்கூராய்வுக்கு பிறகு விமானம் மூலம் இந்தியா கொண்டுவரப்பட்ட ஸுபீன் கர்கின் உடல், அஸ்ஸாம் தலைநகர் குவாஹாட்டி மைதானத்தில் அஞ்சலிக்காக திங்கள்கிழமை வைக்கப்பட்டது. ஸுபினின் உடலுக்கு லட்சக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தினர்.

ஸுபீன் கர்க் உடலுக்கு அஞ்சலி செலுத்த குவிந்த மக்கள்.
ஸுபீன் கர்க் உடலுக்கு அஞ்சலி செலுத்த குவிந்த மக்கள்.AP

தொடர்ந்து, குவாஹாட்டி மருத்துவக் கல்லூரியில் எய்ம்ஸ் மருத்துவர்கள் மேற்பார்வையில் 2-வது முறையாக ஸுபீன் கார்கின் உடல் செவ்வாய்க்கிழமை(செப். 23) காலை 7.30 உடற்கூராய்வு செய்யப்பட்டது.

உடற்கூராய்வுக்குப் பிறகு ஸுபினின் உடலுக்கு பாரம்பரிய 'அசாமிய கமோசா' துணி போர்த்தப்பட்டு, இறுதிச் சடங்குக்காக ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டது.

கம்ரூப் மாவட்டத்தில் உள்ள கமர்குச்சி கிராமத்தில் ஸுபீன் கர்க் உடலுக்கு இறுதிச் சடங்குகள் நடைபெற்றது. இந்த நிகழ்வில், மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு, அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தொடர்ந்து, கமர்குச்சி கிராமத்தில் ஸுபீன் கர்க் உடல், அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

Summary

Singer Zubeen Garg cremated in Assam's Kamarkuchi NC village

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com