
சிபிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் எப்போது தொடங்கும்? என்பது குறித்த உத்தேச தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, அடுத்தாண்டு பிப்ரவரியில் பொதுத் தேர்வுகள் தொடங்கவுள்ளன.
10-ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வைப் பொருத்தவரையில், அதன் முதல் பதிப்பு பிப். 17 - மார்ச் 6 வரையிலும், இரண்டாம் பதிப்பு மே 15 - ஜூன் 1 வரையிலும் நடத்தப்படுகிறது.
12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் பிப். 17 - ஏப். 9 வரை நடத்தப்பட உள்ளன. இந்தத் தகவலை சிபிஎஸ்இ தேர்வு கட்டுப்பாட்டாளர் சன்யம் பாரத்வாஜ் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.