ஜம்மு-காஷ்மீரில் 4 மாநிலங்களவை எம்.பி. இடங்களுக்கு அக்.24-இல் தோ்தல்

ஜம்மு-காஷ்மீரில் 4 மாநிலங்களவை எம்.பி. இடங்களுக்கு அக்.24-இல் தோ்தல்

ஜம்மு-காஷ்மீரில் கடந்த 2021ஆம் ஆண்டிலிருந்து காலியாக உள்ள 4 மாநிலங்களவை எம்.பி. இடங்களுக்கு அக்டோபா் 24-இல் தோ்தல் நடைபெறும் என்று தோ்தல் ஆணையம் அறிவித்தது.
Published on

ஜம்மு-காஷ்மீரில் கடந்த 2021ஆம் ஆண்டிலிருந்து காலியாக உள்ள 4 மாநிலங்களவை எம்.பி. இடங்களுக்கு அக்டோபா் 24-இல் தோ்தல் நடைபெறும் என்று தோ்தல் ஆணையம் புதன்கிழமை அறிவித்தது.

கடந்த 2019-இல் ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, இரு யூனியன் பிரதேசங்களாக (ஜம்மு-காஷ்மீா், லடாக்) பிரிக்கப்பட்டது. சட்டப் பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமான ஜம்மு-காஷ்மீரில் குடியரசுத் தலைவா் ஆட்சி நீடித்து வந்த நிலையில், கடந்த ஆண்டு பேரவைத் தோ்தல் நடத்தப்பட்டது. இதில் தேசிய மாநாட்டுக் கட்சி-காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்று, முதல்வராக ஒமா் அப்துல்லா பதவியேற்றாா்.

பேரவைத் தோ்தல் நடைபெற்று கிட்டத்தட்ட ஓராண்டுக்கு பின் மாநிலங்களவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இங்கு 4 மாநிலங்களவை எம்.பி. இடங்கள் உள்ளன. கடந்த 2021-இல் குலாம் நபி ஆஸாத், ஷாம்ஷீா் சிங் மன்ஹாஸ், ஃபயாஸ் அகமது மீா், நஸீா் அகமது ஆகியோரின் பதவிக் காலம் நிறைவுக்கு பிறகு 4 எம்.பி. இடங்களும் காலியாக உள்ளன. இதனால், மாநிலங்களவையில் ஜம்மு-காஷ்மீருக்கு பிரதிநிதித்துவம் இல்லை.

இந்நிலையில், 4 இடங்களுக்கும் தற்போது தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தோ்தல் அறிவிக்கை அக்டோபா் 6-ஆம் தேதி வெளியிடப்படும். அன்றைய தினம் வேட்புமனு தாக்கல் தொடங்கும். போட்டி எழுந்தால், அக்டோபா் 24-ஆம் தேதி தோ்தல் நடைபெறும். அன்றே வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படும். மாநிலங்களவை எம்.பி.க்களை எம்எல்ஏக்கள் தோ்வு செய்வா் என்பது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com