
லடாக்கில் நடைபெறும் போராட்டத்தில் வெடித்த மோதல்களில் 4 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யூனியன் பிரதேசமான லடாக்கிற்கு, தனி மாநில அந்தஸ்து மற்றும் அரசியலமைப்பின் 6 வது அட்டவனையில் சேர்க்க வேண்டும் எனும் கோரிக்கைகளை முன்வைத்து, அங்கு மாபெரும் போராட்டம் நடைபெற்று வருகின்றது.
இந்தப் போராட்டத்தில், வெடித்த வன்முறையால் லே பகுதியில் உள்ள பாஜக அலுவலகம் மற்றும் போலீஸாரின் வாகனங்கள் மீது தீ வைக்கப்பட்டன. இதையடுத்து, போராட்டக்காரர்கள் மீது காவல் துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், மோதல்களில் 4 பேர் பலியானதாகவும், 30 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், போலீஸாரின் துப்பாக்கிச் சூட்டில்தான் 4 பேரும் பலியானார்கள் என போராட்டக்காரர்கள் கூறுகின்றனர்.
முன்னதாக, லடாக்கில் செப்.10 ஆம் தேதி முதல் தங்களது கோரிக்கைகளை முன்வைத்து 15 பேர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில், 2 பேரது உடல்நிலை பாதிக்கப்பட்டு அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து, முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருவதால் அங்குப் பதற்றமான சூழல் நிலவி வருகின்றது.
இதையும் படிக்க: 7,800 தசரா விழாக் குழுக்களுக்கு தலா ரூ.10,000: அரசு நிதியிலிருந்து நன்கொடை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.