அனில் செளஹான்
அனில் செளஹான்

முப்படை தலைமைத் தளபதியின் பதவிக்காலம் 8 மாதங்களுக்கு நீட்டிப்பு

முப்படை தலைமைத் தளபதி அனில் செளஹானின் பதவிக்காலம் 8 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
Published on

முப்படை தலைமைத் தளபதி அனில் செளஹானின் பதவிக்காலம் 8 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:

கடந்த 2022-ஆம் ஆண்டு செப்.28-ஆம் தேதி முப்படை தலைமைத் தளபதியாக அனில் செளஹான் நியமிக்கப்பட்டாா். அவரின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு மே 30-ஆம் தேதி அல்லது அடுத்த உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அவா் மத்திய அரசின் ராணுவ விவகாரங்கள் துறைச் செயலராகவும் பணியாற்றுவாா். அவரின் பதவிக்கால நீட்டிப்புக்கு மத்திய அமைச்சரவையின் நியமனங்கள் குழு புதன்கிழமை ஒப்புதல் அளித்தது.

கடந்த 1981-ஆம் ஆண்டு இந்திய ராணுவத்தில் அனில் செளஹான் சோ்ந்தாா். அவரின் மிகச் சிறந்த சேவைகளுக்காக பரம் விஷிஷ்ட் சேவை பதக்கம், உத்தம் யுத்த சேவை பதக்கம் உள்பட பல்வேறு பதக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com