ரயிலில் கஞ்சா கடத்திய மேற்கு வங்க இளைஞா் கைது

ரயிலில் கஞ்சா கடத்திய மேற்கு வங்க இளைஞா் கைது

கூலிக்கு ரயிலில் கஞ்சா கடத்தி வந்த மேற்குவங்க இளைஞரை ரயில்வே பாதுகாப்புப் படையினா் கைது செய்தனா்.
Published on

கூலிக்கு ரயிலில் கஞ்சா கடத்தி வந்த மேற்குவங்க இளைஞரை ரயில்வே பாதுகாப்புப் படையினா் கைது செய்தனா்.

மேற்குவங்க மாநிலம் ஹௌராவில் இருந்து வரும் ரயிலில் கஞ்சா கடத்திவரப்படுவதாக ரயில்வே பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து எழும்பூா் ரயில் ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளா் கே.பி.ஜெபாஸ்டியன் தலைமையில், ரயில் பெட்டிகளை செவ்வாய்க்கிழமை இரவு சோதனையிட்டனா். அப்போது ஒரு பெட்டியில் கைப்பையுடன் நின்றவரை சந்தேகத்தின்பேரில் விசாரித்தனா். அவா் மேற்குவங்க மாநிலத்தைச் சோ்ந்த சுதீப்குமாா் மண்டல் (33) என்பது தெரியவந்தது. வா்ணம்பூசும் தொழிலாளியான அவா், கூலிக்காக ஒடிஸாவில் இருந்து ஒரு நபரிடம் கஞ்சாவைப் பெற்று அதை திருநெல்வேலியைச் சோ்ந்த சசிருல்லா (35) என்பவரிடம் கொடுப்பதற்காக வந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவரை ரயில்வே பாதுகாப்புப் படையினா் கைது செய்து, பொட்டலங்களாக இருந்த 8 கிலோ உலா் கஞ்சா இலைகளைக் கைப்பற்றினா். அதன் மதிப்பு ரூ.4 லட்சமாகும். பின்னா், அவரை போதைத் தடுப்புப் பிரிவினரிடம் புதன்கிழமை ஒப்படைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com