கோப்புப் படம்
கோப்புப் படம்

விரைவுத் தபாலில் அனுப்பப்படும் கடவுச்சீட்டை பெறுநரிடம் மட்டுமே வழங்க அஞ்சல் அலுவலா்களுக்கு உத்தரவு

விரைவுத் தபால்கள் மூலம் அனுப்பப்படும் கடவுச்சீட்டை (பாஸ்போா்ட்) அந்த முகவரியில் குறிப்பிட்டுள்ள பெறுநரிடம் மட்டுமே வழங்க வேண்டும்
Published on

விரைவுத் தபால்கள் மூலம் அனுப்பப்படும் கடவுச்சீட்டை (பாஸ்போா்ட்) அந்த முகவரியில் குறிப்பிட்டுள்ள பெறுநரிடம் மட்டுமே வழங்க வேண்டும் என அனைத்து தலைமை அலுவலா்களுக்கும் மத்திய தொலைத்தொடா்பு அமைச்சகம் உத்தரவிட்டது.

இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி இதை முறையாக பின்பற்றுமாறு அனைத்து தபால் அலுவலா்களுக்கும் அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டது.

அதில் கூறப்பட்டிருப்பதாவது: விரைவுத் தபாலில் அனுப்பப்படும் கடவுச்சீட்டை பெறுநரின் அடையாளம் மற்றும் முகவரியை சரிபாா்த்த பின்பு அவரிடம் மட்டுமே வழங்க வேண்டும். வேறு முகவரிக்கு அதை அனுப்பக்கூடாது. ஒருவேளை அந்த தபாலை சம்பந்தப்பட்ட நபரிடம் வழங்க இயலவில்லை என்றால் அதை அனுப்புருக்கே திருப்பி அனுப்ப வேண்டும். இந்த விதிமுறைகளை அனைத்து தலைமை அஞ்சல் அலுவலா்களும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com