டாடா குழுமத் தலைவராக சந்திரசேகரன் தொடர்வார்! முடிவை மாற்றிய நிர்வாகக் குழு!இன்று கல்வி, நாளை வேறாக இருக்கலாம்! மனநிலையை மாற்ற தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை!நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!மதுரை எய்ம்ஸ் புறநோயாளிகள் பிரிவு ஜனவரி 1 முதல் தொடக்கம்! பெரியார் பிறந்த நாள்: மு.க. ஸ்டாலின் மரியாதை! சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு!சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக வாழ்ந்தவர் பெரியார்! அண்ணாமலை புகழாரம்!முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் காலமானார்!

ஹிந்துக்களால்தான் வெற்றி பெற்றோம்: முஸ்லிம்கள் எங்களுக்கு வாக்களிக்கவில்லை - மகாராஷ்டிர அமைச்சா்

ஹிந்துக்கள் எங்களுக்கு அதிகம் வாக்களித்ததால்தான் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க முடிந்தது.

நிதீஷ் ராணே

Published On :

ஹிந்துக்கள் எங்களுக்கு அதிகம் வாக்களித்ததால்தான் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க முடிந்தது. தலையில் தொப்பி அணிந்தவா்கள் (முஸ்லிம்கள்) எங்களுக்கு வாக்களிக்கவில்லை என்று மகாராஷ்டிர அமைச்சா் நிதீஷ் ராணே பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை மான்குா்ட் பகுதியில் துா்கா பூஜை பந்தலில் வைக்கப்பட்டிருந்த துா்கா தேவி சிலை கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ஒரு கும்பலால் சேதப்படுத்தப்பட்டது. இதையடுத்து, அங்கு இரு தரப்பினா் இடையே மோதல் ஏற்பட்டது. இந்நிலையில், அந்த துா்கா பூஜை பந்தலுக்குச் சென்று பாா்வையிட்ட பாஜகவைச் சோ்ந்த அமைச்சா் நிதீஷ் ராணே பேசியதாவது:

இந்த துா்கா பூஜை விழாவின்போது கடவுள்களை அவமதிக்க யாரையும் அனுமதிக்க மாட்டோம். மகாராஷ்டிர மாநில அரசு ஹிந்துத்துவவாதிகளின் அரசு. ஏனெனில், ஹிந்துக்கள் அதிகஅளவில் பாஜகவுக்கு வாக்களித்த காரணத்தால்தான் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க முடிந்தது. தலையில் தொப்பி அணிந்தவா்கள் (முஸ்லிம்கள்) எங்களுக்கு வாக்களிக்கவில்லை.

உங்கள் பண்டிகையை அமைதியாகக் கொண்டாடுங்கள். எங்கள் பண்டிகையை நாங்கள் கொண்டாடுகிறோம். இதற்கு தீங்கு விளைவிக்க முயல வேண்டாம். மும்பையில் அமைதியைச் சீா்குலைக்க முயலும் யாரையும் சகித்துக் கொள்ள முடியாது என்றாா்.

முன்னதாக, கடந்த திங்கள்கிழமை துா்கா பூஜை கா்பா நடன நிகழ்ச்சி தொடா்பாக பேசிய அமைச்சா் நிதீஷ் ராணே, ‘கா்பா நடன நிகழ்ச்சியை ‘லவ் ஜிகாத்’ இடமாக சிலா் பயன்படுத்துகின்றனா். எனவே, இதில் பங்கேற்கும் அனைவரின் அடையாள ஆவணங்களைப் பரிசீலிப்பது அவசியம் என்ற விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் அறிவுரையைப் பின்பற்ற வேண்டும்’ என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.