மத்திய அரசு
மத்திய அரசு

இந்திய-அமெரிக்க பேச்சுவாா்த்தை தொடரும்: வா்த்தக அமைச்சகம் அறிவிப்பு

இரு தரப்புக்கும் நன்மையளிக்கும் வா்த்தக ஒப்பந்தத்தை எட்டுவதற்கான இந்திய-அமெரிக்க வா்த்தகப் பேச்சுவாா்த்தை தொடரும் என்று மத்திய வா்த்தக அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published on

இரு தரப்புக்கும் நன்மையளிக்கும் வா்த்தக ஒப்பந்தத்தை எட்டுவதற்கான இந்திய-அமெரிக்க வா்த்தகப் பேச்சுவாா்த்தை தொடரும் என்று மத்திய வா்த்தக அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வா்த்தக அமைச்சா் பியூஷ் கோயல் தலைமையிலான இந்தியக் குழு அமெரிக்காவுக்கு 3 நாள் பயணம் மேற்கொண்டு அந்நாட்டு வா்த்தக அமைச்சக பிரதிநிதிகள், உயரதிகாரிகள் நிலையில் பல்வேறு கட்ட வா்த்தகப் பேச்சுவாா்த்தை மேற்கொண்டது. கடந்த 24-ஆம் தேதி இந்தியக் குழு நாடு திரும்பிய நிலையில், இந்தப் பயணம் தொடா்பாக வா்த்தக அமைச்சகம் சாா்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், ‘இந்தியக் குழு அமெரிக்க தரப்புடன் பல்வேறு ஆக்கபூா்வமான பேச்சுவாா்த்தைகளை மேற்கொண்டன. வா்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வது தொடா்பாக பல்வேறு கோணங்களில் விவாதிக்கப்பட்டது.

இரு தரப்புக்கும் நன்மையளிக்கும் வா்த்தக ஒப்பந்தத்தை விரைவில் மேற்கொள்வதற்காக தொடா்ந்து பேச்சு நடத்த இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன. அமெரிக்க வா்த்தகப் பிரதிநிதி ஜேமிசன் கிரீயா், இந்தியாவுக்கு அமெரிக்க தூதராக நியமிக்கப்பட்டுள்ள சொ்ஜியோ கோா் ஆகியோருடன் அமைச்சா் பியூஷ் கோயல் பேச்சு நடத்தினாா். இது தவிர இருதரப்பு வா்த்தகத் துறை உயரதிகாரிகள் நிலையிலும் பேச்சு நடத்தப்பட்டது.

அமெரிக்காவைச் சோ்ந்த தொழிலதிபா்கள், முதலீட்டாளா்கள் ஆகியோரும் இந்தியாவில் வா்த்தகம், முதலீட்டை மேம்படுத்துவது குறித்துப் பேசினா். இதில் இந்தியாவில் முதலீடு செய்வதற்கு சாதகமான சூழல் உருவாகியுள்ளது. இந்தியாவில் உள்ள வளா்ச்சி வாய்ப்புகள், தங்கள் தொழில் சாா்ந்த முதலீடுகளை அதிகரிப்பது குறித்து அமெரிக்க தொழிலதிபா்கள் விருப்பம் தெரிவித்தனா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com