சல்மான் ருஷ்டியின் புத்தகத்தைத் தடை செய்யக் கோரிய மனு தள்ளுபடி!

‘தி சாட்டானிக் வெர்சஸ்’ புத்தகத்தைத் தடை செய்யக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது குறித்து...
எழுத்தாளர் சல்மான் ருஷ்டி
எழுத்தாளர் சல்மான் ருஷ்டி(கோப்புப் படம்)
Published on
Updated on
1 min read

ஆங்கில எழுத்தாளர் சல்மான் ருஷ்டியின் ‘தி சாட்டானிக் வெர்சஸ்’ எனும் புத்தகத்தைத் தடை செய்யக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

எழுத்தாளர் சல்மான் ருஷ்டியின் புத்தகங்களில் மிகவும் பிரபலமான ‘தி சாட்டானிக் வெர்சஸ்’ எனும் புத்தகத்தை இறக்குமதி செய்ய, கடந்த 1988 ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி தலைமையிலான மத்திய அரசு தடை செய்து உத்தரவிட்டது.

தடைக்கான உரிய ஆவணங்களை அதிகாரிகள் சமர்பிக்கத் தவறியதால், தில்லி உயர் நீதிமன்றம் கடந்த 2024 ஆம் ஆண்டு ‘சாட்டானிக் வெர்சஸ்’ புத்தகத்தின் மீதான தடையை ரத்து செய்தது.

இதனைத் தொடர்ந்து, வழக்கறிஞர் சந்து குரேஷி என்பவர் உச்ச நீதிமன்றத்தில், சாட்டானிக் வெர்சஸ் புத்தகத்தைத் தடை செய்யக் கோரி மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மெஹ்தா ஆகியோர் முன்னிலையில், இன்று (செப். 26) நடைபெற்றது. அப்போது, மனுதாரர் தில்லி உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு சவால் விடுப்பதாகக் கூறிய உச்ச நீதிமன்றம், இந்த மனுவை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக, ‘தி சாட்டானிக் வெர்சஸ்’ புத்தகம் தங்களது மதத்தை அவமதிப்பதாகக் கூறி உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், கடந்த 1988 ஆம் ஆண்டு அந்தப் புத்தகத்தை இறக்குமதி செய்ய மத்திய அரசு தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: செல்போன், மின்னணு சாதனங்களுக்கு ஃபிளிப்கார்டின் எக்ஸ்சேஞ்ச் திட்டம்!

Summary

The Supreme Court has dismissed a petition seeking a ban on English author Salman Rushdie's book 'The Satanic Verses'.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com