சிபிஎஸ்இபிரதிப் படம்
இந்தியா
ஒற்றைப் பெண் குழந்தைக்கு உதவித்தொகை: சிபிஎஸ்இ தகவல்
ஒற்றைப் பெண் குழந்தைக்கான உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.
ஒற்றைப் பெண் குழந்தைக்கான உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.
இது குறித்து சிபிஎஸ்இ சாா்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு:
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) சாா்பில் ஒற்றைப் பெண் குழந்தைக்கு உதவித்தொகை வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பத்தாம் வகுப்பை முடித்து பிளஸ் 1 பயிலும் மாணவிகள் இணையதளத்தில் அக். 23-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தகுதிபெறும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகையாக வழங்கப்படும். பெண் குழந்தைகளிடம் கல்வியை ஊக்குவிக்கும் விதமாக இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. இது குறித்த கூடுதல் விவரங்களை மேற்கண்ட தளத்தில் அறிந்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.