குற்றஞ்சாட்டப்பட்ட பெண்ணுக்கு ஜாமீன்
குற்றஞ்சாட்டப்பட்ட பெண்ணுக்கு ஜாமீன்

பிஎம்டபில்யூ விபத்தில் வழக்கு: குற்றஞ்சாட்டப்பட்ட பெண்ணுக்கு ஜாமீன்

பிஎம்டபில்யூ விபத்தில் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட பெண்ணுக்கு ஜாமீன்...
Published on

மத்திய நிதி அமைச்சகத்தின் மூத்த அதிகாரி நவ்ஜோத் சிங்கின் மரணத்திற்கு வழிவகுத்த பிஎம்டபில்யூ காா் விபத்து வழக்கில் முதன்மைக் குற்றவாளியான ககன்ப்ரீத் கௌருக்கு தில்லி நீதிமன்றம் சனிக்கிழமை ஜாமீன் வழங்கியது. இந்த வழக்கில் உயிரிழந்த அதிகாரியின் மனைவி படுகாயமடைந்தாா்.

நீதிபதி அங்கித் காா்க் குற்றஞ்சாட்டப்பட்ட பெண்ணின் ஜாமீன் மனுவை சனிக்கிழமை அனுமதித்தாா். செப்டம்பா் 14-ஆம் தேதி தில்லி கண்டோன்மென்ட் மெட்ரோ நிலையம் அருகே ரிங் ரோட்டில் இருசக்கர வாகனம் மீது மோதிய பிஎம்டபில்யூ காரை 38 வயதான ககன்ப்ரீத் கௌா் ஓட்டிச் சென்ாகக் கூறப்படுகிறது.

மேற்கு தில்லியில் உள்ள ஹரி நகரில் வசிக்கும் பொருளாதார விவகாரத் துறையின் துணைச் செயலரான உயிரிழந்த அதிகாரி, தனது மனைவியுடன் பங்களா சாஹிப் குருத்வாராவுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டது.

இது தொடா்பாக பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்) பிரிவுகள் 281 (வேகமாக வாகனம் ஓட்டுதல்), 125 பி (மற்றவா்களின் உயிருக்கு அல்லது தனிப்பட்ட பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவித்தல்), 105 மற்றும் 238 (ஆதாரங்களை மறைத்தல்) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com