70 வயதில் இப்படிப் பேசலாமா? -பாஜக அமைச்சரை விமர்சிக்கும் காங்.! என்ன நடந்தது?

ராகுல் - பிரியங்கா காந்தி உறவை விமர்சித்து சர்ச்சையில் சிக்கியுள்ள பாஜகவைச் சேர்ந்ததொரு மூத்த தலைவரைப் பற்றி...
ராகுல் - பிரியங்கா
ராகுல் - பிரியங்கா
Published on
Updated on
2 min read

பாஜகவைச் சேர்ந்த மூத்த அமைச்சர் ஒருவர் பொதுவெளியில் ராகுல் - பிரியங்கா காந்தி உறவை விமர்சித்திருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

மத்திய பிரதேச மாநில பாஜக மூத்த தலைவரும் அம்மாநில நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சருமான கைலாஷ் விஜய்வர்கியா, கடந்த சில நாள்களுக்கு முன் பாஜக சித்தாந்த தலைவர் பண்டிட் தீன்தயாள் உபாத்யாய் பிறந்தநாளையொட்டி நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசும்போது, “பழங்கால கலாசாரத்தை பின்பற்றும் மக்கள் நாம். நமது சகோதரியைக் கட்டிக் கொடுத்த ஊருக்குச் சென்றால், அந்த ஊரில் தண்ணீர்கூட வாங்கிப் பருகமாட்டோம்.

எமது தந்தையார், அவரது அகோதரியைப் பார்க்கச் செல்லும் போதெல்லாம் எங்கள் வீட்டிலிருந்து ஒரு பானையில் தண்ணீர் சுமந்து செல்வதையே வழக்கமாகக் கொண்டிருந்தார். அப்படிப்பட்ட பழக்கங்களைப் பின்பற்றி வாழ்பவர்கள் நாம்.

ஆனால், இன்றைய காலகட்டத்தில் நமது எதிர்க்கட்சி தலைவர்கள் எப்படி இருக்கிறார்கள் தெரியுமா? நடுரோட்டில் வைத்து தமது தங்கைகளை முத்தமிடுகிறார்கள். மக்களாகிய உங்களிடமே இந்தக் கேள்வியை கேட்கிறேன், பதிலளியுங்கள்...

உங்களில் யாராவது உங்கள் தங்கைகளையோ மகள்களையோ பொதுவெளியில் வைத்து முத்தமிடுவீர்களா? இந்தச் செயலானது மதிப்பைக் குறைக்கிறது. இதுபோன்ற விஷயங்களெல்லாம், வெளிநாடுகளிலிருந்து வந்தவை. ஒரு பிரதமரிடமே ஆக்ரோஷமாக பேசுபவர்கள் அவர்கள்” என்றார்.

மேலும் இது குறித்து அவர் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், “இப்படி நடந்து கொண்டிருப்பது அவர்தம்(ராகுல் காந்தி) தவறு அல்லவே. எதிர்க்கட்சித் தலைவர் வெளிநாட்டில் கல்வி பயின்றவர். ஆகவே அவர் இந்த விஷயங்களையெல்லாம் அங்கிருந்து இங்கும் கொண்டு வந்திருக்கிறார்.. .அவர் இந்திய கலாசாரம், பழக்கவழக்கங்களைப் புரிந்து கொள்ளவில்லை. பிரதமரையே மதிப்பு குறைவாகவே பேசுவார் அவர்” என்றார்.

படம் | கைலாஷ் விஜய்வர்கியா எக்ஸ் தளப் பதிவு

இதனைத்தொடர்ந்து, பாஜக அமைச்சரின் இந்த சர்ச்சைக்குரிய கருத்துக்கு காங்கிரஸ் தரப்பிலிருந்து எதிர்ப்பும் கண்டனமும் வலுவாக வந்துள்ளது.

“புனிதமான அண்ணன் - தங்கை உறவை இழிவுபடுத்துவதற்காக அன்னையை தெய்வமாகக் கொண்டாடும் பண்டிகை காலமான நவராத்திரி காலத்தை கைலாஷ் விஜய்வர்கியா பயன்படுத்தியிருக்கிறார். அவர் எந்தத் தொனியில் இவற்றையெல்லாம் பேசியிருக்கிறார் என்பது எல்லோருக்குமே தெரியும்.

அவர் திரும்பத்திரும்ப பெண்களை இழிவுபடுத்தி வருகிறார். பெண்களின் ஆடைகள், அவர்தம் கல்வி, அவர்தம் பேச்சு இப்படி பல விஷயங்களிலும் பெண்களை இழிவுபடுத்தி வருகிறார் அவர்.

நமது சகோதரிகளைக் குறித்தும் மகள்களைக் குறித்தும் அவர் இப்படித்தான் யோசிப்பார் போலும்... இந்த 70 வயதிலும் அவர், நமது கலாசாரத்தையும் பெண்களையும் அவமத்திக்கும் பொருட்டு அநகரிக கருத்துகளை தெரிவித்து வருகிறார்.

இத்தகைய வெட்கக்கேடான கருத்துக்கு பதிலளிப்பதை நினைக்கும்போது, எனக்கு அவமானமாக இருக்கிறது” என்று மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜீத்து பட்வாரி தெரிவித்துள்ளார்.

Summary

The controversy over Madhya Pradesh Urban Development Minister Kailash Vijayvargiya's remarks targeting Leader of Opposition Rahul Gandhi's bond with his sister Priyanka Gandhi Vadra has now deepened: “At the age of 70, he is making absurd statements” - Congress Jitu Patwar

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com