
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, தென் அமெரிக்க நாடுகளுக்கு சுற்றுப் பயணம் சென்றுள்ளதாக கட்சியின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
தென் அமெரிக்காவைச் சேர்ந்த நான்கு நாடுகளுக்கு அவர் சுற்றுப் பயணம் சென்றுள்ளதாகவும, அங்கு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் மாணவர்கள், தொழிலதிபர்களை அவர் நேரில் சந்தித்து உரையாடவிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பவன் கேரா வெளியிட்டிருக்கும் தகவலில், ராகுல் காந்தி எத்தனை நாள்கள் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டுள்ளார் என்பது இடம்பெறவில்லை.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தென் அமெரிக்க நாடுகளுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு அவர் அரசியல் கட்சித் தலைவர்கள், பல்கலை மாணவர்கள், தொழிலதிபர்கள் மற்றும் தொழில் அமைப்புத் தலைவர்களுடன் கலந்துரையாடவிருக்கிறார் என்று பவன் கேரா தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தென் அமெரிக்க நாடுகளின் அதிபர்கள் மற்றும் அரசியல் மூத்த தலைவர்களை, ராகுல் காந்தி சந்தித்துப் பேச திட்டமிட்டிருப்பதாகவும், ஜனநாயக மற்றும் இருநாட்டு நல்லுறவை பலப்படுத்தும் வகையிலும் இந்த சந்திப்பு நடைபெறும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்க வரி விதிப்பு முறையைத் தொடர்ந்து, இந்தியாவுடன் பல்வேறு தொழில் உறவுகளை மேம்படுத்துவது, வேலை வாய்ப்பு மற்றும் நாட்டில் உள்ள தொழில்வாய்ப்புகளைப் பற்றி தென் அமெரிக்க நாடுகளுக்கு எடுத்துரைக்கும் வகையிலும் தொழிலதிபர்கள் மற்றும் தொழில் அமைப்புகளையும் ராகுல் காந்தி சந்தித்துப் பேசவிருக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.