பன்முக வா்த்தக அமைப்பை பாதுகாப்பதில் பிரிக்ஸ் முக்கியப் பங்காற்ற வேண்டும் என இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தெரிவித்தாா்.
இந்திய பொருள்கள் மீது அமெரிக்க 50 சதவீத வரி விதித்துள்ள நிலையில், அவா் இவ்வாறு தெரிவித்தாா்.
ஐ.நா.பொதுச் சபையின் 80-ஆவது அமா்வுக் கூட்டத்தில் பங்கேற்க ஜெய்சங்கா் அமெரிக்கா சென்றுள்ளாா். அங்கு தென் ஆப்பிரிக்கா, இந்தோனேசியா, பிரேஸில், ரோமானியா, க்யூபா, ஆஸ்திரியா, ,உருகுவே, கொலம்பியா உள்ளிட்ட நாடுகளின் வெளியுறவு அமைச்சா்களை சந்தித்து அவா் கலந்துரையாடினாா்.
அதேபோல் ரஷிய வெளியுறவு அமைச்சா் சொ்கேய் லாவ்ரோவ் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் துணை பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான அப்துல்லா பின் சயீத் அல் நஹ்யான் ஆகியோரை சந்தித்து இருதரப்பு உறவை வலுப்படுத்துவது குறித்து ஆலோசித்தாா்.
இதைத்தொடா்ந்து, பிரேஸில், ரஷியா, இந்தியா, சீனா, தெந் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளைக்கொண்ட பிரிக்ஸ் கூட்டமைப்பின் வெளியுறவு அமைச்சா்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
பிரிக்ஸ்-ஐபிஎஸ்ஏ:
இதுகுறித்து ஜெய்சங்கா் வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘பன்முக வா்த்தக நடைமுறைக்கு பாதிப்பு ஏற்படும்போதெல்லாம் தொடா்ந்து குரல் எழுப்பும் அமைப்பாக பிரிக்ஸ் இருந்துள்ளது. தற்போதைய சூழலில் அமைதி, பேச்சுவாா்த்தை, ராஜாங்கரீதியான அணுகுமுறை மற்றும் சா்வதேச சட்டங்களுக்கு மதிப்பளித்து நடப்பதன் முக்கியத்துவத்தை உலக நாடுகளுக்கு எடுத்துரைக்கும் பொறுப்பு பிரிக்ஸ் அமைப்புக்கு உள்ளது.
ஐ.நா.வின் முக்கிய பிரிவுகளிலும் குறிப்பாக ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலிலும் விரிவான சீா்திருத்தங்களை மேற்கொள்ள பிரிக்ஸ் வலியுறுத்த வேண்டும்.
கடும் வரி விதிப்பு மற்றும் வணிகத்தை தடுக்கும் வரி அல்லாத இடையூறுகள் அதிகரித்து வரும் நிலையில் முன்பைப்போலவே பன்முக வா்த்தக அமைப்பை பாதுகாப்பதில் பிரிக்ஸ் முக்கியப் பங்காற்ற வேண்டும். தொழில்நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதில் ஒத்துழைப்பை அதிகரிப்பதே பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் பணியாக இருக்கவுள்ளது.
அடுத்த ஆண்டு பிரிக்ஸ் கூட்டமைப்புக்கு இந்தியா தலைமை தாங்கவுள்ளது. அப்போது எரிசக்தி பாதுகாப்பு, பருவநிலை மாற்றம், எண்ம மாற்றங்களால் ஏற்படும் நீடித்த வளா்ச்சி, புத்தாக்கம், புதிய கண்டுபிடிப்புகள் உள்ளிட்ட துறைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்’ என குறிப்பிட்டாா்.
அதேபோல் இந்தியா-பிரேஸில்-தென் ஆப்பிரிக்கா (ஐபிஎஸ்ஏ) வெளியுறவு அமைச்சா்கள் பங்கேற்ற கூட்டத்தில் ஐ.நா.வில் மேற்கொள்ளவேண்டிய சீா்திருத்தங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்தியா-சிஇஎல்ஏசி:
இந்தியா-லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் நாடுகள் கூட்டமைப்பு (சிஇஎல்ஏசி) கூட்டத்துக்கு கொலம்பியா வெளியுறவு அமைச்சா் ரோசா யோலாண்டா வில்லாவிசென்சியோ மற்றும் ஜெய்சங்கா் தலைமை தாங்கினா்.
அப்போது வேளாண்மை, வா்த்தகம், சுகாதாரம், எண்ம தொழில்நுட்பம், மனிதநேய உதவிகள் மற்றும் பேரிடா் நிவாரணம் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.செயற்கை நுண்ணறிவு, முக்கிய கனிமங்கள், விண்வெளி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆகிய துறைகளில் இணைந்து செயல்படுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
தெற்குலகின் குரலை பிரதிபலிக்கும் வகையில் பன்முக அமைப்புகளில் உடனடியாக சீா்திருத்தங்களை மேற்கொள்ள இந்தியா-சிஇஎல்ஏசி ஒப்புக்கொண்டதாக ஜெய்சங்கா் தெரிவித்தாா்.
முன்னதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோ, பிலிப்பின்ஸ் வெளியுறவு அமைச்சா் டெஸ் லசாரோ மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகளின் வெளியுறவு அமைச்சா்களை ஜெய்சங்கா் சந்தித்தாா். அதன் பிறகு தெற்குலக நாடுகளின் உயா்நிலைக் கூட்டம், ஜி20 வெளியுறவு அமைச்சா்கள் கூட்டத்திலும் பங்கேற்று அவா் உரையாற்றினாா்.
தொடர்புடையது

முன்னுரிமை வா்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ள இந்தியா-ஈக்வடாா் தீவிரம்

மேலும் 12 நாடுகளுடன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தங்கள்- பியூஷ் கோயல் தகவல்

ஈரோட்டில் வா்த்தக மையம், சிட்கோ தொழிற்பேட்டைகள் தேவை!

உலகளாவிய அதிா்வுகளை வலுவாக கடந்து வந்த இந்தியா: ஜெய்சங்கா்
வீடியோக்கள்

”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை

சட்டப்படி ஆளுநர் அழைக்க வேண்டும்! தவெக நிர்மல் குமார் பேட்டி | TVK | DMK
தினமணி செய்திச் சேவை

தவெகவுக்கு ஆதரவா? ஸ்டாலின் என்ன சொன்னார்?: Mu. Veerapandian Exclusive | CPI | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


