
ஜம்மு-காஷ்மீர், பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து மூடப்பட்டிருந்த ஏழு சுற்றுலா தலங்களை ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம் திங்கள்கிழமை மீண்டும் திறந்தது.
முன்னதாக வெள்ளிக்கிழமை நடந்த ஒருங்கிணைந்த தலைமையகக் கூட்டத்தில் முழுமையான பாதுகாப்பு மறுஆய்வு குறித்து விவாதிக்கப்பட்டது.
கூட்டத்திற்குப் பிறகு துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா பிறப்பித்த உத்தரவின் பேரில் சுற்றுலா தலங்கள் திங்கள்கிமை திறக்கப்பட்டன.
இதுகுறித்து துணைநிலை ஆளுநா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக தற்காலிகமாக மூடப்பட்ட காஷ்மீர் மற்றும் ஜம்மு பிரிவுகளில் உள்ள கூடுதல் சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க உத்தரவிட்டுள்ளேன் என்று தெரிவித்திருந்தார்.
கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி நிகழ்ந்த பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து கிட்டத்தட்ட 50 சுற்றுலா தலங்கள் மூடப்பட்டன.
ஏற்கெனவே ஜூன் மாதத்தில் பஹல்காமின் சில பகுதிகள் உள்பட 16 சுற்றுலா தலங்கள் மீண்டும் திறக்கப்பட்ட நிலையில் தற்போது மேலும் ஏழு சுற்றுலா தலங்களை ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம் திறந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.