
லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலை கனடாவின் பயங்கரவாத அமைப்பாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
இந்தியா உள்பட சர்வதேச அளவில் கொலை, மிரட்டிப் பணம் பறித்தல், ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் ஆகியவற்றில் தொடர்புடைய லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலை பயங்கரவாத அமைப்பாக கனடா அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதன்மூலம், கனடாவில் பிஷ்னோய் கும்பலுடன் தொடர்புடைய அல்லது சொந்தமான எந்தவொரு சொத்துகளையும் முடக்கவோ பறிமுதல் செய்யவோ அந்நாட்டு அதிகாரிகளுக்கு அதிகாரம் அளிக்கப்படுகிறது. அந்நாட்டு சட்டத்தின்படி, பட்டியலிடப்பட்ட பயங்கரவாத அமைப்புக்கு தெரிந்தே சொத்து அல்லது நிதியுதவி வழங்குவது அல்லது அதன் சொத்துகளைக் கையாள்வது என்பது குற்றமாகும்.
இந்தியாவுக்கு வெளியே செயல்படும் பன்னாட்டு குற்றவியல் அமைப்பான பிஷ்னோய் கும்பல், கனடாவிலும் உள்ளனர். மேலும், குறிப்பிடத்தக்க புலம்பெயர் சமூகங்கள் இருக்கும் பகுதிகளில் தீவிரமாக உள்ளனர்.
கொலை, துப்பாக்கிச் சூடு, தீவைப்பு, மிரட்டிப் பணம் பறித்தல் ஆகியவற்றில் ஈடுபடுவதன் மூலம் இந்தக் கும்பல் பயங்கரவாதத்தை உருவாக்குகிறது. மேலும், குறிப்பிட்ட சமூகத்தின் தலைவர்கள், பிரமுகர்கள், வணிகங்களில் குறிவைத்து, அக்குறிப்பிட்ட சமூகத்தினரிடையே பாதுகாப்பின்மையை ஏற்படுத்துவதாகக் கூறுகின்றனர்.
இதையும் படிக்க: இத்தாலி பிரதமர் மெலோனி சுயசரிதைக்கு பிரதமர் மோடி முன்னுரை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.