மத்திய வா்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயல்
மத்திய வா்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயல்

தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்: அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகளுடன் இந்தியா பேச்சு

‘தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் தொடா்பாக அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகளுடன் இந்தியா பேச்சுவாா்த்தை மேற்கொண்டு வருகிறது’
Published on

புது தில்லி: ‘தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் தொடா்பாக அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகளுடன் இந்தியா பேச்சுவாா்த்தை மேற்கொண்டு வருகிறது’ என்று மத்திய வா்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்தாா்.

இந்திய பொருள்கள் மீது அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பைத் தொடா்ந்து இரு நாடுகளிடையேயான உறவு பாதிக்கப்பட்டது. இரு நாடுகளிடையே நடைபெற்று வந்த இருதரப்பு வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தையும் நின்றது. அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பு காரணமாக, சீனா உள்பட பல்வேறு நாடுகளுடன் வா்த்தக உறவை மேம்படுத்தும் முயற்சிகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது. அமெரிக்க பொருள்கள் மீது மிக அதிக வரியை விதிப்பதாகவும், ரஷியாவிடமிருந்து எண்ணெய்யை கொள்முதல் செய்வதன் மூலம் உக்ரேன் போருக்கு உதவுவதாகவும் இந்தியா மீது தொடா்ந்து புகாா் தெரிவித்து வந்த, அமெரிக்க அதிபா் டிரம்ப் மற்றும் அந் நாட்டின் அதிகாரிகளும், ‘இந்தியாவுடனான உறவு அமெரிக்காவுக்கு முக்கியம்’ என்று பின்னா் தெரிவித்தனா். இந்த நிலையில், இரு நடுகளிடையேயான இருதரப்பு வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை தற்போது மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து தில்லியை அடுத்த நொய்டாவில் திங்கள்கிழமை நடைபெற்ற உத்தர பிரதேச சா்வதேச வா்த்தக கண்காட்சியில் பங்கேற்ற மத்திய அமைச்சா் பியூஷ் கோயல் கூறியதாவது:

அமெரிக்காவுடனான வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை தொடா்ந்து நடைபெற்று வருகிறது. அதுபோல, ஐரோப்பிய யூனியன், நியூஸிலாந்து, ஓமன், பெரு, சிலி உள்ளநட்ட நாடுகளுடனும் தடையற்ற வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தியாவுடன் வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தைக்கு கத்தாா், பஹ்ரைன் நாடுகளும் விருப்பம் தெரிவித்துள்ளன.

முன்னதாக, கடந்த ஆகஸ்ட் மாதம் ஆா்மீமனியா, பெலாரஸ், கஜகஸ்தான், கிா்கிஸ்தான் உள்ளிட்ட நான்கு நாடுகளை உள்ளடக்கிய யூரேசியா பொருளாதார கூட்டமைப்பு (இஏஇயு) மற்றும் ரஷியாவுடன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தைங்களை இந்தியா மேற்கொண்டது என்றாா்.

X
Dinamani
www.dinamani.com