வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: கேரள அரசு தீர்மானம் நிறைவேற்றம்!

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிராக கேரள சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்...
Kerala CM Pinarayi Vijayan
முதல்வர் பினராயி விஜயன்IANS
Published on
Updated on
1 min read

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ள முயற்சிக்கும் தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு எதிராக கேரள சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பிகாரில் சட்டப்பேரவைத் தேர்தல் வரவுள்ளதையடுத்து அங்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இதனைத் தொடர்ந்து அனைத்து மாநிலங்களுக்கும் இதனை விரிவுபடுத்த தேர்தல் ஆணையம் முயற்சி மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் கேரள அரசு இதற்கு எதிராக சட்டப்பேரவையில் இன்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

"உச்சநீதிமன்றம் இதுகுறித்து இன்னும் தனது தீர்ப்பை அறிவிக்காத நிலையில், தேர்தல் நடைபெறவுள்ள கேரளம், தமிழ்நாடு, மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் செய்ய தேர்தல் ஆணையம் அவசர அவசரமாக முயற்சி செய்கிறது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தேசிய குடிமக்கள் பதிவேட்டை(NRC) மறைமுகமாக செயல்படுத்துவது ஆகும்.

பிகாரில் மக்களுக்கு நடந்த அநீதி பிற மாநில மக்களுக்கும் நடந்துவிடும் அச்சம் உள்ளது.

கேரளத்தில் விரைவில் தேர்தல் வரவுள்ளதால் இது மக்களின் உரிமையைப் பறிக்கும் முயற்சி" என்று இந்த தீர்மானத்தை முன்மொழிந்த முதல்வர் பினராயி விஜயன் கூறியிருக்கிறார்.

Summary

Kerala Assembly passes unanimous resolution expressing concern over EC's SIR

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com