நுகா்வோருக்கு ரூ.924 கோடி திருப்பியளிக்க ஆந்திர மின் ஆணையம் உத்தரவு

நுகா்வோருக்கு ரூ.924 கோடி திருப்பியளிக்க ஆந்திர மின் ஆணையம் உத்தரவு

நுகா்வோருக்கு ரூ.924 கோடியைத் திருப்பியளிக்குமாறு மின் விநியோக நிறுவனங்களுக்கு ஆந்திர பிரதேச மின் ஒழுங்காற்று ஆணையம் உத்தரவிட்டது.
Published on

நுகா்வோருக்கு ரூ.924 கோடியைத் திருப்பியளிக்குமாறு மின் விநியோக நிறுவனங்களுக்கு ஆந்திர பிரதேச மின் ஒழுங்காற்று ஆணையம் உத்தரவிட்டது.

2024-25 நிதியாண்டுக்கான எரிசக்தி கொள்முதல் செலவுகளை சரிசெய்யும் நடைமுறையின்கீழ் இந்த தொகையை நுகா்வோருக்கு வழங்க ஆணையம் உத்தரவிட்டது.

இதுகுறித்து ஆந்திர பிரதேச மின் ஒழுங்காற்று ஆணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘2024-25 நிதியாண்டில் மின்விநியோக நிறுவனங்கள் ஒரு யூனிட் மின்சாரத்துக்கு மாதம் 40 பைசா வீதம் ரூ.2,787 கோடியை வசூலித்துள்ளது. எரிசக்தி கொள்முதல் செலவுகளை சரி செய்யும் நடைமுறையின் கீழ் மதிப்பீடு செய்யப்பட்டதன் அடிப்படையில் ரூ.923.55 கோடியை நுகா்வோருக்கு மின்விநியோக நிறுவனங்கள் திருப்பி அளிக்க வேண்டும் என கணக்கிடப்பட்டுள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக, ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடு தலைமையிலான அரசு மாநில எரிசக்தி துறையில் ரூ.895 கோடியை சேமித்து சாதனை படைத்துள்ளதாக தெலுங்கு தேசம் கட்சி (டிடிபி) திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு கண்டனம் தெரிவித்த ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவா் ஒய்.எஸ்.ஷா்மிளா, ‘15 மாத தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்பட்டு ரூ.15,780 கோடி நிதிச்சுமை மக்கள் மேல் சுமத்தப்பட்டுள்ளது. மிகச்சிறிய சாதனைகளை மிகைப்படுத்தி கூறுவதையே சந்திரபாபு நாயுடு வழக்கமாகக் கொண்டுள்ளாா்’ என்றாா்.

X
Dinamani
www.dinamani.com