
பிகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் அடிப்படையில் இறுதி வாக்காளர் பட்டியலை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
வாக்காளர் பட்டியலில் உள்ள தங்கள் பெயரின் விவரங்களை, தேர்தல் ஆணைய இணைய தளத்தில் சரிபார்க்கலாம் என்று பிகார் தலைமைத் தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
சிறப்பு தீவிர திருத்தத்திற்கு (SIR) பிறகு பிகாரின் இறுதி வாக்காளர் பட்டியலில் மொத்தம் 7.42 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.
நடப்பாண்டு இறுதியில் பேரவைத் தோ்தல் நடைபெறும் பிகாரில் வாக்காளா் பட்டியலில் இருந்து சட்டவிரோத குடியேறிகளின் பெயா்களை நீக்கும் நோக்கில் அண்மையில் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.
பிகாரில் கடைசியாக சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்ட 2003-ஆம் ஆண்டை அடிப்படையாகக் கொண்டு, தற்போது திருத்தப் பணிகள் நடைபெற்றன.
அதன்படி, 2003-க்கு முன்பு பிகாரில் வாக்காளா்களாகப் பதிவு செய்தவர்கள் (சுமாா் 60%), கூடுதல் ஆவணம் எதையும் சமர்ப்பிக்காமல், வாக்காளர்களாகத் தொடர அனுமதிக்கப்பட்டனர். 2003-க்குப் பிறகு பதிவு செய்தவர்கள் (சுமாா் 40%), கடவுச் சீட்டு, பிறப்புச் சான்று, ஆதாா் உள்ளிட்ட 12 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைச் சமா்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டது.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில், நாடு முழுவதும் இப்பணியை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது.
தமிழகம், அஸ்ஸாம், கேரளம், புதுச்சேரி மற்றும் மேற்கு வங்கத்தில் அடுத்த ஆண்டு பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், இந்த நடவடிக்கை முக்கியத்துவம் பெற்றுள்ளது. தமிழகத்தில் முந்தைய சிறப்பு தீவிர திருத்தம் 2002-இல் மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: வாழும் தெய்வம்: நேபாளத்தில் 2 வயது சிறுமி கடவுளாகத் தேர்வு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.