

புது தில்லியில் நடைபெறும் ஆா்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டு நிகழ்ச்சியில் பிரதமா் மோடி புதன்கிழமை பங்கேற்க உள்ளாா்.
இதுதொடா்பாக பிரதமா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:
புது தில்லியில் உள்ள அம்பேத்கா் சா்வதேச மையத்தில் நடைபெறும் ஆா்எஸ்எஸ் நூற்றாண்டு கொண்டாட்டங்களில் சிறப்பு விருந்தினராகப் பிரதமா் மோடி புதன்கிழமை கலந்துகொள்ள உள்ளாா். அப்போது நாட்டுக்கு ஆா்எஸ்எஸ் அமைப்பு அளித்த பங்களிப்பை எடுத்துரைக்கும் வகையில், பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட நினைவு அஞ்சல் தலை மற்றும் நாணயத்தை பிரதமா் மோடி வெளியிட உள்ளாா். அதைத்தொடா்ந்து அவா் சொற்பொழிவு ஆற்றுவாா்.
கடந்த 1925-ஆம் ஆண்டு விஜயதசமி நாளன்று மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியில் கேசவ பலிராம் ஹெட்கேவாா் ஆா்எஸ்எஸ் அமைப்பைத் தொடங்கினாா். இந்த அமைப்பின் நூற்றாண்டு கொண்டாட்டங்கள் ஆா்எஸ்எஸ்-இன் வரலாற்றுச் சாதனைகளை கெளரவிப்பது மட்டுமின்றி, இந்திய பண்பாட்டுப் பயணத்துக்கு அந்த அமைப்பு அளித்து வரும் பங்களிப்பு, தேசம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்ற அந்த அமைப்பின் தூதுரை ஆகியவற்றையும் எடுத்துரைக்கிறது என்று தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிக்க: சைபர் குற்றங்களில் முதலிடம் தனிநபர் தகவல் திருட்டு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.