ஈரானில் இந்தியர்கள் பாதுகாப்பாக இருப்பதாக ஈரான் தூதரகம் தெரிவித்துள்ளது.
ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து தாக்குதல் நடத்தி வரும்நிலையில், பதிலடியாக ஈரானும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், மத்திய கிழக்கில் தொடர்ந்து பதற்றமும் நிலவி வருகிறது.
இந்த நிலையில், "இந்திய நண்பர்கள் மிகவும் பாதுகாப்பான கைகளில் உள்ளனர், கவலை வேண்டாம்" என இந்தியாவுக்கான ஈரான் தூதரகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதலையடுத்து, ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடியுள்ளது. மேலும், அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அவர்களின் நட்பு நாடுகளின் கப்பல்களை ஹோர்முஸ் நீரிணையை வழியே அனுமதிக்க முடியாது எனவும் ஈரான் திட்டவட்டமாகக் கூறியுள்ளது.
இருப்பினும், இந்தியா, சீனா, ரஷியா, இராக், பாகிஸ்தான் உள்ளிட்ட நட்பு நாடுகளின் கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.
உலகளாவிய எண்ணெய் வர்த்தகத்தில் சுமார் 20 சதவிகித அளவிலான பங்கு வகிக்கும் ஹோர்முஸ் நீரிணை வழியாக, கடந்த மாதத்திலிருந்து மிகச் சில கப்பல்களே அனுமதிக்கப்படுவதால், இந்தியா உள்பட பல்வேறு நாடுகளிலும் எரிசக்தி விநியோகத்தில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
Summary
‘Indian Friends Are In Safe Hands’: Iran's Assurance As West Asia Conflict Grows
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டிரம்பின் அடுத்த திட்டம் என்ன? உலக வரைபடத்தில் அமெரிக்க தேசியக் கொடியால் போர்த்தப்பட்ட ஈரான்!

போரிலிருந்து மக்களைக் காக்க அரசு தவறி விட்டது: மார்க்சிய கம்யூனிஸ்ட்

ஹோா்முஸ் நீரிணையைத் திறந்தது ஈரான்: இஸ்ரேல் - லெபனான் போா்நிறுத்தம் எதிரொலி

ஈரான் போர்: நாடு திரும்பிய 6 லட்சம் இந்தியர்கள்!
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


