ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து 8-வது எல்பிஜி கப்பல் இந்தியா நோக்கி வந்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
'கிரீன் ஆஷா' என்கிற இந்திய கப்பல் மேற்காசிய போர் காரணமாக ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் சிக்கியிருந்தது. ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய உள்ளிட்ட சில நாடுகளுக்கு மட்டும் ஈரான் அனுமதி வழங்கியுள்ள நிலையில் 8-வது இந்தியக் கப்பலாக ‘கிரீன் ஆஷா’ எல்பிஜி கப்பல் நீரிணையைக் கடந்து இந்தியா நோக்கி வந்துகொண்டிருக்கிறது.
முன்னதாக இந்தியக் கொடியேந்திய எரிவாயு கப்பலான கிரீன் சான்வி எனும் கப்பல் 46,650 மெட்ரிக் டன் எல்பிஜி-யுடன் பாதுகாப்பாக ஏப்ரல் 3 அன்று ஹோர்முஸ் நீரிணையைக் கடந்தது.
கடந்த மார்ச் 28 அன்று, 47,000 மெட்ரிக் டன்களுடன் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த ஒரு கப்பல் குஜராத்தின் ஜாம்நகர் துறைமுகம் வந்தடைந்தது.
பாதுகாப்பு காரணங்களுக்காக அவ்வழியே வரும் வர்த்தக கப்பல்களுக்கு பாதுகாப்பளிக்கும் விதமாக இந்திய கடற்படையின் போர்க் கப்பல்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
மேற்காசிய போர் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் ஹோர்முஸ் நீரிணை வழியே இந்தியக் கப்பல்களை அனுமதிக்க ஈரானுடன் இந்தியா நடத்திய தொடர் பேச்சுவார்த்தையின் காரணமாக இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
18 இந்தியக் கப்பல்களுடன் 485 மாலுமிகள் ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் தற்போது சிக்கியிருப்பதாக இந்திய கப்பல் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. அவர்களுடன் தொடர்ந்து இணைப்பில் உள்ளதாகவும் அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் முகேஷ் மங்கல் கூறுகையில், “இதுவரை 964-க்கும் மேற்பட்ட மாலுமிகள் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். மேலும், இந்திய துறைமுகங்கள் வழக்கம் போல் இயங்கி வருகின்றன. அதுமட்டுமின்றி, போர்ச்சூழலில் வளைகுடா நாடுகளில் இருந்து 5.98 லட்சம் பயணிகள் இந்தியா திரும்பியுள்ளனர்” என்று அவர் தெரிவித்தார்.
Eighth India-flagged LPG carrier crosses Strait of Hormuz
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஹோர்முஸ் நீரிணையில் தடையற்ற போக்குவரத்துக்கு ஈரான் மறுப்பு!

ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்: தடை விதிக்கும் ஈரான்!

ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க 13 இந்திய கப்பல்கள் காத்திருப்பு! மத்திய அரசு தகவல்!

போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்!
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு



