பிகாரின் துணை முதல்வர்கள் விஜய் குமார் சௌத்ரி, பிஜேந்திர பிரசாத் யாதவ் ஆகியோருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநில உள்துறை வெளியிட்ட அறிவிப்பின்படி, இரு துணை முதல்வர்களுக்கும் இனி இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படும். இசட் பிரிவு பாதுகாப்பில், நவீன ஆயுதங்கள் ஏந்திய பயிற்சி பெற்ற வீரர்கள் அடங்கிய ஒரு சிறப்பு குழு இடம்பெற்றிருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சௌத்ரி, யாதவின் பாதுகாப்பு ஏற்பாடுகளை துறை ஆய்வு செய்த பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். முன்னதாக இசட்-பிளஸ் பாதுகாப்பைப் பெற்று வந்த மூத்த பாஜக தலைவரும் முன்னாள் துணை முதல்வருமான விஜய் குமார் பாதுகாப்பை அரசு குறைத்துள்ளது.
இதேபோல் நிதீஷ் குமாரின் மகனும் ஜேடி(யு) தலைவருமான நிஷாந்த் குமாருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கி அரசு வெளியிட்ட மற்றொரு அறிவிப்பில் தெரிவித்துள்ளது. அதேசமயம் மாநிலங்களவை உறுப்பினராக உள்ள பிகாரின் முன்னாள் முதல்வர் நிதீஷ் குமாருக்கு மாநில அரசு அண்மையில் இசட்-பிளஸ் பாதுகாப்பு வழங்கியது.
இசட்-பிளஸ் என்பது அரசால் வழங்கப்படும் மிக உயரிய பாதுகாப்பு என்று அந்த அதிகாரி கூறினார். பிகாரின் முதல்வராக சாம்ராட் சௌதரி கடந்த ஏப்.15ஆம் தேதி பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Summary
The Bihar government has heightened security arrangements for Deputy Chief Ministers Vijay Kumar Choudhary and Bijendra Prasad Yadav, officials said on Saturday.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முதல்வர் விஜய்க்கு ‘இசட் பிளஸ்’ பாதுகாப்பு! எப்படி இருக்கும்?

பிகாரில் நிதிஷ்குமாரின் மகன் உள்பட 31 அமைச்சர்கள் பதவியேற்பு!

தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரி உடலுக்கு விஜய் நேரில் அஞ்சலி!

தில்லி சட்டப்பேரவைக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்களால் சபாநாயகருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு
விடியோக்கள்

வெளியானது 'தி ரேஜ்' லிரிக் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது பிளாஸ்ட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக அரசுக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள்: கமல்ஹாசன் | CM Vijay | Kamal Haasan |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | சிஎஸ்கே பிளே ஆஃப் செல்ல என்னென்ன வாய்ப்புகள் உள்ளன? | Chennai Super Kings | CSK vs SRH |
தினமணி செய்திச் சேவை


