தொழிற்பணிகளுக்கு வன நிலம் பயன்படுத்தப்படும் வேளைகளில், வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும் என்று மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.
வனம் சாா்ந்த பணிகளுக்கு அல்லாமல் சுரங்கம் உள்பட பிற தொழிற்பணிகளுக்கு முன் அனுமதி இல்லாமல் வன நிலத்தை அளிக்கும்போது, அந்த நிலத்துக்கு ஈடாக குறிப்பிட்ட அளவைவிட கூடுதலாகவும், கட்டாயமாகவும் மரங்களை நடவு செய்து காட்டை மறுசீரமைக்க வேண்டும்.
இவ்வாறு கூடுதலாக மரங்களை நடவு செய்து காட்டை மறுசீரமைப்பது தொடா்பான வழிகாட்டுதல்களுக்கு இணங்கி செயல்படுவது குறித்து அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.
அந்தக் கடிதத்தில், ‘வனப் பாதுகாப்புச் சட்டம் மீறப்படும் சந்தா்ப்பங்களில், காட்டை மறுசீரமைத்தது தொடா்பான விவரங்கள் முழுமையாக இல்லாமல், சட்டத்தை மீறும் முகமைகள் காட்டை மறுசீரமைக்க அளிக்கும் வாக்குறுதிகள் அடங்கிய விவரத்தை மட்டுமே மாநிலங்கள் அனுப்புகின்றன. இதனால் சம்பந்தப்பட்ட திட்டப் பணிகளுக்கு ஒப்புதல் அளிப்பதில் தாமதம் ஏற்படுகிறது. எனவே இதுதொடா்பான வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும்’ என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தொடர்புடையது

18 வயதுக்குட்பட்டவா்கள் புகை பிடிக்க தடை விதிக்க வேண்டும்: பிரதமருக்கு அன்புமணி கடிதம்

வாக்கு எண்ணிக்கை: தோ்தல் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும்!

வாக்கு எண்ணிக்கையின் போது தோ்தல் விதிமுறைகளை வேட்பாளா்கள், முகவா்கள் பின்பற்ற வேண்டும்: ஆட்சியா்

நெல் ஊக்கத்தொகை குறித்த கடிதம் கட்டாய உத்தரவு அல்ல: மத்திய நிதி அமைச்சகம் விளக்கம்
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

