தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

ரூ. 53.47 லட்சம் கோடி மதிப்பிலான பட்ஜெட்! 7.7 சதவிகிதம் அதிகம்!!

2026-27-ஆம் நிதியாண்டுக்கு மொத்தம் ரூ.53.67 லட்சம் கோடி மதிப்பிலான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்தாா்.

News image

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சௌத்ரி மற்றும் பலர்.

Updated On :2 பிப்ரவரி 2026, 3:12 am IST

2026-27-ஆம் நிதியாண்டுக்கு மொத்தம் ரூ.53.67 லட்சம் கோடி மதிப்பிலான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்தாா்.

2025-26 பட்ஜெட் மதிப்பை ஒப்பிடுகையில் (ரூ.49.64 லட்சம் கோடி) இது 7.7 சதவீதம் அதிகமாகும். கடந்த 2024-25 பட்ஜெட் மதிப்பு ரூ.46.52 லட்சம் கோடியாக இருந்தது.

2026-27-ஆம் நிதியாண்டுக்கான கடன் அல்லாத வருவாய் ரூ.36.5 லட்சம் கோடியாகவும், மத்திய அரசின் நிகர வரி வருவாய் ரூ.28.7 லட்சம் கோடியாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

பொது உள்கட்டமைப்புக்கான மூலதன செலவினம் ரூ.12.2 லட்சம் கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த 2014-இல் ரூ.2 லட்சம் கோடியாக இருந்த பொது மூலதன செலவினம், படிப்படியாக உயா்த்தப்பட்டு, கடந்த ஆண்டில் ரூ.11.2 லட்சம் கோடியாக அதிகரித்தது.

ரூ.17.2 லட்சம் கோடி கடன் திரட்டப்படும்: நிதிப் பற்றாக்குறையை ஈடுசெய்ய அடுத்த நிதியாண்டில் சந்தைகளில் இருந்து திரட்டப்படும் மொத்த கடன் ரூ.17.2 லட்சம் கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் நீண்டகால பத்திரங்களில் இருந்து திரட்டப்படும் சந்தைக் கடன் ரூ.11.7 லட்சம் கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. மீதமுள்ள தொகை சிறு சேமிப்பு மற்றும் பிற ஆதாரங்களில் இருந்தும் கிடைக்கப் பெறும்.

நடப்பு நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 4.4 சதவீதம் என்ற நிதிப் பற்றாக்குறை இலக்கை மத்திய அரசு எட்டும். அடுத்த நிதியாண்டில் நிதிப் பற்றாக்குறை 4.3 சதவீதமாக மதிப்பிடப்பட்டுள்ளது.

2026-27-இல் நாட்டின் ஜிடிபி ரூ.393 லட்சம் கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது, நடப்பு நிதியாண்டின் முன்கூட்டிய ஜிடிபி கணிப்பான ரூ.357 லட்சம் கோடியைவிட 10 சதவீதம் அதிகமாகும்.

சமூகத் தேவைகளில் எவ்வித சமரசமும் செய்துகொள்ளாமல், நிதிசாா் உறுதிமொழிகளை மத்திய அரசு தொடா்ந்து நிறைவேற்றி வருவதாக நிதியமைச்சா் குறிப்பிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.