அணுமின் உற்பத்தி திட்டங்களுக்குத் தேவைப்படும் பொருள்களின் இறக்குமதிக்கு அடிப்படை சுங்க வரியில் இருந்து அளிக்கப்பட்ட விலக்கு 2035-ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் பட்ஜெட் உரையில் கூறுகையில், ‘அணுமின் உற்பத்தி திட்டங்களுக்குத் தேவைப்படும் பொருள்களின் இறக்குமதிக்கு அடிப்படை சுங்க வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. இந்த வரி விலக்கு 2035-ஆம் ஆண்டு வரை, அனைத்து அணுமின் உற்பத்தி நிலையங்களுக்கும் நீட்டிக்கப்படுகிறது.
முக்கிய கனிமங்களை கையாள்வதற்கு தேவைப்படும் மூலதனப் பொருள்களின் இறக்குமதிக்கு அடிப்படை சுங்க வரியில் இருந்து விலக்களிக்கப்படுகிறது.
இதேபோல சிவில், பயிற்சி மற்றும் பிற விமானங்களின் தயாரிப்புக்குத் தேவைப்படும் கருவிகள், பாகங்களுக்கு அடிப்படை சுங்க வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. சிவில் மற்றும் பாதுகாப்புத் துறையில் விமானப் போக்குவரத்துத் தொழில் துறையை ஊக்குவிக்கும் நோக்கில், இந்த விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விலங்கியல் பூங்காக்களில் காட்சிப்படுத்தப்படும் மிருகங்கள் மற்றும் பறவைகளை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய அடிப்படை சுங்க வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. அதில் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அவற்றை இறக்குமதி செய்ய 30 சதவீதம் வரி விதிக்கப்படும்’ என்று தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கூடங்குளம் அணுமின் நிலைய கட்டுமானப் பணிகளை நிறுத்த வலியுறுத்தல்
ஈரோடு மாவட்டத்தில் குழந்தை பிறப்பு ஆண்டுதோறும் சராசரியாக 500 வரை குறைவு

மின்னணு சாதன உதிரிபாகங்களுக்கான அடிப்படை சுங்க வரி ரத்து: மத்திய அரசு

40 பெட்ரோகெமிக்கல் பொருள்கள் இறக்குமதிக்கு சுங்க வரி விலக்கு: ஜூலை 15 வரை நீட்டிப்பு
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



