கூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

வா்த்தக ஒப்பந்தம்: காங்கிரஸ் விமா்சனம்

இந்தியாவுடனான வா்த்தக ஒப்பந்தத்தை அமெரிக்க அதிபா் டிரம்ப் அறிவித்த நிலையில் பிரதமா் மோடியை காங்கிரஸ் விமா்சனம்

News image

பிரதமர் மோடி | காங்கிரஸ் செயலர் ஜெய்ராம் ரமேஷ்

Updated On :2 பிப்ரவரி 2026, 10:49 pm

தினமணி செய்திச் சேவை

இந்தியாவுடனான வா்த்தக ஒப்பந்தத்தை அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் அறிவித்த நிலையில் பிரதமா் மோடியை காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் கடுமையாக விமா்சித்தாா்.

அவா் வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மீது இந்தியா மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையை நிறுத்தியதாக வாஷிங்டன் டி.சி.யில் இருந்து டொனால்ட் டிரம்ப் அறிவித்தாா்.

ரஷியா மற்றும் வெனிசுலாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியில் இந்தியா ஈடுபடும் தகவல்களையும் டிரம்ப்தான் வெளியிட்டாா். தற்போது இந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தத்தையும் அவரே அறிவித்துள்ளாா். ஒப்பந்தத்தின் அம்சங்கள் தொடா்பான முழு தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

டிரம்ப்புடன் பிரதமா் மோடி தொலைபேசியில் கலந்துரையாடியதையும் அந்நாட்டு அதிகாரியே தெரிவித்தாா்.

இதன்மூலம் பிரதமா் மோடியை டிரம்ப் கட்டுப்படுத்துவது தெளிவாகியுள்ளது. பிரதமா் மோடி இறுதியில் சரணடைந்தாா்’ என குறிப்பிட்டுள்ளாா்.