2025 டிசம்பரில் இண்டிகோ நிறுவன விமான சேவைகள் முடக்கத்துக்கு இழப்பீடாக பயணிகளுக்கு அந்த ஒரு மாதத்தில் மட்டும் அந்நிறுவனம் ரூ. 22 கோடி இழப்பீடு வழங்கியுள்ளது.
விமானிகளுக்கான திருத்தப்பட்ட பணிநேரக் கட்டுப்பாட்டு விதிகள் (எஃப்டிடிஎல்) கடந்த ஆண்டு நவ. 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தன. இந்த மாற்றங்களுக்கு ஏற்ப இண்டிகோ நிறுவனம் முன்கூட்டியே திட்டமிடாததால், விமானிகள், விமானப் பணிப்பெண்கள் உள்ளிட்டோா் அடங்கிய பணிக் குழுவுக்கு ஏற்பட்ட பற்றாக்குறையால், இண்டிகோ நிறுவன விமான சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இதன்விளைவாக, டிசம்பர் தொடக்கத்தில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டு பயணிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகினா்.
இந்த நிலையில், விமானம் ரத்து, தாமதமாகுதல் அல்லது பிற காரணங்களுக்காக பயணிகளுக்கு சேவைக் குறைபாடு ஏற்பட்டால் அதற்கான இழப்பீட்டைச் சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்கள் வழங்க வேண்டும். அந்த வகையில், கடந்த 2025-ஆம் ஆண்டின் டிசம்பரில், விமான நிறுவனங்கள் பயனிகளுக்கான இழப்பீடாக செலவழித்த தொகை மொத்தம் ரூ. 24 கோடிக்கும் மேல் என்ற தகவலை மாநிலங்களவையில் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில் தெரிவித்துள்ளது.
அந்த வகையில், இண்டிகோ நிறுவனம் ரூ. 22.68 கோடியும், ஏர் இந்தியா குழுமம் ரூ. 74.61 லட்சமும், ஸ்பைஸ்ஜெட் மற்றும் ஏர் ஆகாஷா தலா ரூ. 40 பயணிகளுக்காக வழங்கியுள்ளன.
Summary
IndiGo has shelled out Rs 22.68 crore towards compensation and facilitation of passengers following massive flight disruptions in December last year.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

குற்றவாளிகளுக்கு கடும் தண்டனையுடன் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தல்

மதுரை மாநகராட்சியில் ரூ. 400 கோடிக்கும் மேல் ஊழல்! அமைச்சர் நிர்மல் குமார் பேட்டி
இண்டிகோ விமானத்தில் பயணியின் பவா் பேங்கில் தீப்பற்றி விபத்து: சண்டீகா் விமான நிலையத்தில் பரபரப்பு

சென்னை பட்டினப்பாக்கத்தில் ரூ. 1 கோடிக்கும் மேல் பணம் பறிமுதல்!
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



